அகதிகள் முகாமில் மோதல், 2 பேருக்கு கத்திக்குத்து

admin1

கோவை :  கோவை ஆலாந்துறை அருகே, உள்ள பூலுவபட்டியில் இலங்கை அகதிகள், முகாம் உள்ளது .இங்கு வசிப்பவர் கிருஷ்ண பிரகாஷ் (32),  கட்டிட தொழிலாளி.  இவருக்கும் அதே முகாமில் குடியிருக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது . இது அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. இதனால். 2 பேரையும் கண்டித்துள்ளார். இதையடுத்து கடந்த ஒரு வருடமாக,  அந்தப் பெண் கிருஷ்ணபிரகாசுடன்,  பேசாமல் தவிர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கிருஷ்ண பிரகாஷ் மீண்டும் அந்தப் பெண்ணை தன்னுடன் பேச வற்புறுத்தியுள்ளார்.

இதனால் அந்தப் பெண் மற்றும் குடும்பத்தினர்,  கிருஷ்ணபிரகாஷ் மீது ஆலாந் துறை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ண பிரகாஷ், நேற்று குடிபோதையில் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றார் . அந்த பெண்ணின் உறவினர்களுடன் தகராறு செய்தார். அப்போது அந்தப் பெண்ணின், அண்ணன் ஐவனை (29), கத்தியால் குத்தினார்.  இதையடுத்து சுதாரித்துக்கொண்ட ஐவன்,  அந்தக் கத்தியை பிடுங்கி கிருஷ்ண பிரகாசை குத்தினார். இந்த மோதலில் 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது . இவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்து வமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர் .இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணபிரகாஷ், ஐவன் ஆகியோர் மீது காவல் துறையினர்,  வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

கோவையிலிருந்து  நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

ரூ 2 லட்சம் லஞ்சம் ஆடிட்டர் கைது, சி.பி.ஐ. நடவடிக்கை

581 கோவை : கோவை மே 12,  வெளிநாடுகளில் இருந்து கொண்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள், உள்ளிட்டவற்றுக்கு நன்கொடை வசூலிப்பதில்,  அந்நிய செலவாணி மோசடி நடந்திருப்பதாக,  சி.பி.ஐ .விசாரணையில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452