அதிர்ச்சி தகவல் 2 பேர் கைது

admin1

ராமநாதபுரம்:  ராமநாதபுரம்  மாவட்டம் , சித்தார்கோட்டை, பாரதி நகரை சேர்ந்தவர் பஞ்சவர்ணம்.  இவரது மகன் விக்னேஸ்வரன் ( வயத21) இவர் துடியலூர் அம்பிகா நகரிலுள்ள டாஸ்மாக் கடைபாரில் (எண் 2024) சப்ளையராக வேலை பார்த்து வந்தார்.டாஸ்மாக் கடைக்கு 2 பேர் மது அருந்த வந்தனர்.  பாரில் வைத்து அவர்கள் மது அருந்தினார்கள். அங்கிருந்த சில உணவுப்பொருட்களை வாங்கி சாப்பிட்டார்கள்.  பிறகு அவர்களிடம் விக்னேஸ்வரன் அவர்களிடம் பணம் கேட்டார்  அதற்கு அவர்கள் கொடுக்க மறுத்தனர்.  இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.  இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து பார் சப்ளையர் விக்னேஸ்வரனை தலையில் கல்லால் தாக்கினார்கள்,அவரை கீழே பிடித்து தள்ளி வயிற்றில் மிதித்ததாக கூறப்படுகிறது. இதில் விக்னேஸ்வரன் படுகாயமடைந்தார்.

அவர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்காமல் நேற்று இறந்தார் . இதுகுறித்து துடியலூர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.  இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் வழக்குப்பதிவு செய்து துடியலூர் வெள்ளக்கிணர் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 22) இடையர்பாளையம்  காந்திநகர் உதயகுமார் (வயது 23 ) ஆகியோரை கைது செய்தார்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

புனித ஆலயத்தில் கைவரிசை

491 கோவை :  கோவை போத்தனூர் வெள்ளலூர் ரோட்டில் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயம் உள்ளது இந்த ஆலயத்தின் கேட்டில் உண்டியல் பொருத்தப்பட்டிருந்தது.  நேற்று முன்தினம் யாரோ மர்ம […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452