அப்பழுக்கற்ற பணிபுரிந்த காவல்துறையை சேர்ந்த 39 பேருக்கு பாராட்டு விழா

Admin
திருச்சி: திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்பேரில், மாநகரில் 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற பணிக்கான (Unblemished Service) நிகழ்ச்சியானது இன்று (17.07.2021) திருச்சி கே.கே.நகர் மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காலை 1030 மணியளவில் நடைபெற்றது.
இவ்விழாவில், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு அவர்கள் தலைமையேற்று 25 ஆண்டுகள் அப்பழுக்கற்ற முறையில் சிறப்பாக பணி புரிந்த காவல் ஆளிநர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசு பொருள்கள் வழங்கினார்கள். மேலும் 39 காவல் ஆளினர்களுக்கு தமிழக அரசு வழங்கும் ரூ.2000/- பண வெகுமதி அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இவ்விழாவில் திருச்சி மாநகர காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. நிஷாந்த்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

வேலூரில் 35 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் எஸ்பி பாராட்டு

580 வேலூர்: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக வந்த […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452