அரிச்சுவடியின் மூலம் போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் காவல்துறையினர்

Admin

கடலூர்: கடலூர் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்றுவதற்குறிய தொடர் நடவடிக்கைகளை மாவட்ட காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பி.சரவணன் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் மங்கலம்பேட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு.அன்பழகன் அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் போக்குவரத்து விழிப்புணர்வை மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் விபத்தில்லா பயண அரிச்சுவடியை உருவாக்கியுள்ளார்.

அளவான வேகம் ஆபத்தில்லாத பயணம் என சின்ன சின்ன வாசகங்களுடன் தொடங்கும் இந்த அரிச்சுவடி மாணவர்கள் எளிதாக படித்து நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நவீன அரிச்சுவடி மாணவர்கள் ஆர்வமுடன் படித்து மனப்பாடம் செய்து உரக்க வாசிக்கின்றனர். மேலும் இது மாணவர்கள் மூலம் கிராமங்கள் வரை சென்று சேர்கிறது.

நவீன அரிச்சுவடியை தயாரித்து அவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகளை எடுத்துக்கூறிவரும் உதவி ஆய்வாளர் அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஈரோடு SP தலைமையில் உயிரிழந்த காவலர்களுக்கு வீரவணக்கம்

பணியின் போது உயிரிழந்த காவலர்கள் மற்றும் சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு, ஈரோடு காவல்துறையினர் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452