அ.தி.மு.க கிளை செயலாளர் நள்ளிரவில் வெட்டி கொலை

Prakash

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஜனப்பன்சத்திரம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் எம்ஜிஆர் நகர் அதிமுகவின் கிளை செயலாளராக இருந்து வந்துள்ளார்.

நேற்று நள்ளிரவு வீட்டின் அருகே கழுத்து, கை, கால் என சிலம்பரசன் உடல் முழுவதும் சரமாரியாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிலம்பரசனை கொலை செய்ததாக அதை பகுதியை சேர்ந்த ஆகாஷ், ரஞ்சித்குமார் ஆகிய இருவர் சோழவரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.

கஞ்சா விற்பனையை காட்டி கொடுப்பதாக ஏற்பட்ட தகராறில் சிலம்பரசனை கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இருவரிடமும் சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருவள்ளுர் இருந்து குடியுரிமை நிருபர்

V.கோபி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

21 காவலர்களுக்கு அதிநவீன தோள்பட்டை கேமராக்கள்

317 திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல்துறையினர் பணிபுரியும் இடங்களில் ஏற்படும் நிகழ்வுகளை கண்காணிக்கவும், காவல்துறையினர் மேற்கொள்ளும் பணிகள் குறித்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!