ஆட்டோ ஓட்டுநர் எரித்து கொலை, இருவர் கைது!

admin1

திருவள்ளூர் :   மாங்காடு, சாதிக் நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சிராஜுதீன், (36), என்பவரை காணவில்லையென, அவரது மனைவி திருவேற்காடு காவல் நிலையத்தில்,  புகார் அளித்தார். இந்நிலையில், பூந்தமல்லி அருகே, எரிக்கப்பட்ட நிலையில்,  கிடந்த ஆண் சடலம், சிராஜுதீன் என தெரிந்தது. கொலையாளிகளை காவல் துறையினர் , தேடிவந்த நிலையில், சிராஜுதீன் தனது கள்ளக்காதலி , துணை நடிகையை கொலை செய்த வழக்கில், இருவரும் கைது செய்யப்பட்ட விவரம் காவல் துறையினருக்கு, தெரிந்தது.   இதையடுத்து, ஜூனத்திடம்  இது குறித்து காவல் துறையினர் , கூறியதாவது, துணை நடிகை கொலை வழக்கில் சிராஜுதீன், ஜூனத் இருவரும் ஜாமினில் வெளிவந்த பிறகு, ஜூனத்திற்கு மகேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று சிராஜுதீன், மகேஷ் இருவரும் மது அருந்திவிட்டு,  ஜூனத் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது, ஜூனத் மகள்களிடம் சிராஜுதீன் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.  இதனால் ஆத்திரமடைந்த மகேஷ், சிராஜுதீனை தாக்கியதில், அவர் உயிரிழந்தார். பின்னர், சிராஜுதீன் தலை மற்றும் இரண்டு கைகளையும் துண்டாக வெட்டி, மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்று, திருமழிசை பகுதியில்,  தீ வைத்து எரித்துள்ளனர். உடலை, அவருடைய ஆட்டோவில் கொண்டு சென்று, சம்பவ இடத்தில் தீ வைத்து கொளுத்தி விட்டு, ஆட்டோ நம்பரை அழித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட  சிராஜுதீனின், தலை மற்றும் கைகளை எரித்த இடத்தை, மகேஷ் மாற்றி மாற்றி கூறுவதால் தலை, கைகள் கிடைப்பதில்,  சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர்,தீவிர விசாரணை, நடத்தி வருகின்றனர்.

 

நமது குடியுரிமை நிருபர்கள்

திரு. J. மில்டன்

மற்றும்

திரு. J. தினகரன்

நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா

திருவள்ளூர்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

சட்டக்கல்லூரி மாணவர், தற்கொலை

527 சென்னை : நெல்லை மாவட்டம்,  கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் முபாரக். தையல்காரரான இவர், தற்போது தனது குடும்பத்துடன் ஆவடி கன்னிகாபுரம், காந்தி தெருவில் வசித்து வருகிறார். இவருடைய […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452