ஆர்.கே.நகர் காவல் குழுவினரை பாராட்டிய காவல் ஆணையர்

Admin
சென்னை : ஆர்.கே.நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ராஜாமுகமது (தண்டையார்பேட்டை) மற்றும் 5 நபர்களை கைது செய்து, 76 கிலோ கஞ்சா, 2 ஆட்டோக்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றுதல் செய்த H-6 ஆர்.கே.நகர் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். (05.03.2021)
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப, அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான “DAD – DRIVE AGAINST DRUGS ” தொடர்ச்சியாக வண்ணாரப்பேட்டை உதவி ஆணையாளர் திரு.ஜுலியஸ் சீசர் மேற்பார்வையில், H-6 ஆர்.கே.நகர் காவல் ஆய்வாளர் திரு.மகாவிஷ்ணு தலைமையில், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களை கொண்ட தனிப்படையினர் 04.3.2021 அன்று மாலை கொருக்குப்பேட்டை, எண்ணூர் நெடுஞ்சாலை, அருகே கண்காணித்தபோது, அவ்வழியே வந்த 2 ஆட்டோக்களை நிறுத்தி விசாரணை செய்து சோதனை செய்தபோது, ஆட்டோக்களில் கஞ்சா கடத்தி வந்த 1.ராஜாமுகமது, வ/26, தண்டையார்பேட்டை, 2.யாசர் அராபத், வ/28, , கொடுங்கையூர், 3.சரவணன், வ/31, கொடுங்கையூர், 4.முகமது ரியாஸ், வ/23, தண்டையார்பேட்டை, 5.ஜெய்னூலாபுதின், வ/20, தண்டையார்பேட்டை, 6.சஞ்சய், வ/19, தண்டையார்பேட்டை ஆகிய 6 நபர்களை கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 76 கிலோ கஞ்சா, 2 ஆட்டோக்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் இன்று (05.03.2021) நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

MENX HER என்ற இணைய தளம் மூலமாக டேட்டிங், 16 லட்சம் மோசடி

496 சென்னை : சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த திரு.மனிஷ்குப்தா என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் MENX HER என்ற இணைய தளம் மூலமாக அடையாளம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!