இந்தியக் காவல் பணி

இந்தியக் காவல் பணி (இந்தியன் போலிஸ் சர்வீஸ்[IPS]), பொதுவாக இந்தியக் காவல் என்று அழைக்கப்படும் (அ) இ.கா.ப அனைத்து இந்திய பணிகளின் (குடியுரிமைப் பணியியல்) மூன்று பணிகளுள் ஒன்றாக, மக்களின் பாதுகாப்பு பணியினை மேற்கொள்ளும் சிறப்பு அமைப்பாக இந்திய அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்டதாகும். ஏனைய இரண்டு பணிகள் இந்திய ஆட்சிப் பணி[IAS] மற்றும் இந்திய வனப் பணி [IFS]ஆகும்.

1947 இல் இந்தியா பிரித்தானியரிடமிருந்து விடுதலைப் பெற்ற பிறகு 1948 இல் பேரரசுக் காவல் (இம்பீரியல் போலிஸ்) என்றிருந்தப் பெயர் இந்தியக் காவல் பணி (இ.கா.ப) என்று பெயர் மாற்றம் கண்டது.

தேர்வு மற்றும் பயிற்சிகள்

ஒருவர் இந்திய காவல் பணியில் சேர்ந்து சேவைப் புரிய அவர் மைய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பெறும் குடியுரிமைப் பணி தேர்வுகளில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இப்பொதுத்தேர்வு இந்திய ஆட்சிப் பணி, பிரிவு ஏ மற்றும் பிரிவு பி மைய அரசுப் பணிகளுக்கும் சேர்த்து நடத்தப்படுகின்றன. (இந்திய வனப் பணித் தேர்வு தனியாக மைய அரசுத் தேர்வாணையத்தால் நடத்தப்படுகிறது).

தேர்வு நிலைகள்

  • இத் தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்பெறுகின்றன.

    • முதனிலை தேர்வு (Preliminary Examination) கொள்குறி வகைத் (புலனறிவு) தேர்வாக நடத்தப்படுகிறது.

    • முதனிலையில் தேறியவர்கள் இரண்டாம் நிலை முக்கியத் தேர்வுக்கு (Main Examination) அனுமதிக்கப்படுகின்றனர்.

    • இரண்டாம் நிலையில் (முக்கியத் தேர்வில்) தேறியவர்கள் மூன்றாவது தேர்வான நேர்காணல் தேர்வுக்கு (Personality Test) புது தில்லிக்கு அழைக்கப்படுகின்றனர்.

  • முக்கியத் தேர்வில் தேர்வு எழுதுபவருக்கு கட்டாயப் பாடங்களான பொதுக்கல்வி, கட்டுரை மற்றும் கட்டாய மொழித் தாள் மற்றும் ஆங்கிலத் தாள் இவற்றைத் தவிர வேறு இரண்டு விருப்பப் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

தேர்வு நடைமுறை

இந்தியக் காவல் பணித் தேர்வுகளின் மதிப்பீடு

தேர்வுகள்

பாடம்

கேட்கப்படும் கேள்விகள்

ஒரு கேள்விக்கான மதிப்பெண்

மொத்த மதிப்பெண்

முதனிலைத் தேர்வு

பொதுப் பாடம்

150

1

150

விருப்பப் பாடம் 1

120

2.5

300

முதனிலைத் தேர்வு மொத்த மதிப்பெண்

450

முக்கியத் தேர்வு
(9 தாள்கள் கொண்டது)

விருப்பத் தேர்வு-1

2 தாள்கள்

தாள் ஒன்றுக்கு 300 ம.பெ

600

விருப்பத் தேர்வு-2

2 தாள்கள்

தாள் ஒன்றுக்கு 300 ம.பெ

600

பொதுப் பாடம்

2 தாள்கள்

தாள் ஒன்றுக்கு 300 ம.பெ

600

கட்டுரை

“”””

200

200

ஆங்கிலம் தாள் (தகுதி வாய்ந்தனவாக)

கட்டாய மொழி (தகுதி வாய்ந்தனவாக)

மேற்கண்டத் தேர்வுகளில் தேர்வு பெற்றவர்கள் நேர்காணலுக்கு முக்கியத் தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் அழைப்பாணைகள் மூலம் அழைக்கப்படுவர்

நேர்காணல்

300

Bitnami