இன்று ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு தமிழ்நாட்டில் மட்டும் 763 பேர் பங்கேற்பு

Admin

ஐஏஎஸ், ஐபிஎஸ் மெயின் தேர்வு இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. தமிழ்நாட்டில் சென்னை மையத்தில் 763 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளில் 985 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூன் 18-ம் தேதி நடந்து முடிந்தது. இந்தியா முழுவதும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதினர். இதில் முதல்நிலைத் தேர்வில் 13,350 பேர் மெயின் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றனர்.

மெயின் தேர்வு அக்டோபர் 28 முதல் நவம்பர் 3-ம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அறிவித்திருந்தது. அதன்படி சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. தமிழ்நாட்டில் சென்னை உட்பட நாடு முழுவதும் 24 முக்கிய நகரங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. முதல் நாளில் கட்டுரைத் தாள் தேர்வு நடக்கிறது.

சென்னையில் எழும்பூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அசோக்நகர் அரசு மேல்நிலைப் பள்ளி (புதூர் பள்ளி) ஆகிய 3 இடங்களில் 763 பேர் தேர்வெழுதுகிறார்கள். உடல் ஊனமுற்ற மாணவர்களுக்காக எழும்பூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மையத்தில் 7 பேர் தேர்வெழுத உள்ளனர். நவம்பர் 3-ம் தேதி தேர்வு முடிவடைகிறது. கடைசி நாளில் விருப்பப் பாடத் தேர்வுகள் நடை பெறுகின்றன.

தமிழகத்தில் யுபிஎஸ்சி சார்பில் அரசு தேர்வுத் துறை மெயின் தேர்வு நடத்துகிறது. தேர்வு நடைபெறுவதைக் கண்காணிக்க டெல்லியில் இருந்து யுபிஎஸ்சி உயர் அதிகாரிகள் 2 பேர் வந்துள்ளனர். அவர்கள் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு கண்காணிப்பார்கள். மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்த கட்டமாக நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

இறுதியாக எழுத்துத் தேர்வு மதிப்பெண், நேர்முகத் தேர்வு மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்படும். அதன் அடிப்படையில், ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உட்பட 24 விதமான மத்திய அரசின் உயர் பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப் படுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

வெவ்வேறு வழிப்பறி சம்பவங்களில் குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

85 கடலூர்: கடந்த செப்டம்பர் மாதம் 26ம் தேதி சிதம்பரம் பொய்யாப்பிள்ளை சாவடி குறுக்கு ரோடு அருகில் பாலகிருஷ்ணன்(37) என்பவர் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிவா(எ)சிவராஜ் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452