இரண்டாம் நிலைக்காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு

Prakash

திருச்சி: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 2020-ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலைக் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் காலியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த 13.12.2020 அன்று நடைபெற்றது.

இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு (மொத்தம் – 3210 நபர்கள், ஆண்கள்-2204, பெண்கள்-1005 மற்றும் திருநங்கை-1) அடுத்தகட்டமாக 26.07.2021-ம் தேதி முதல் 05.08.2021-ம் தேதி வரை திருச்சி, சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல் (ஆண்களுக்கு) உயரம் அளத்தல், மார்பளவு அளத்தல், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு உயரம் அளத்தல் உள்ளிட்ட தேர்வுகள் நடக்கவிருக்கின்றது.

உடற்தகுதி தேர்வு (ஆண்களுக்கு 1500 மீட்டர் தூரத்தை 7 நிமிடங்களில் ஒடி முடிக்க வேண்டும், பெண்கள் மற்றும் திருநங்கைகள் 400 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 30 வினாடிகளில் ஓடி முடிக்க வேண்டும்) தேர்வுகள் நடைபெற உள்ளது.

இத்தேர்வானது தமிழ்நாடு சீருடை பணியாளர் துணைக்குழுவின் தலைவரும், திருச்சி மாவட்டகாவல் கண்காணிப்பாளருமான முனைவர்.பா.மூர்த்தி தலைமையில் நடைபெறவிருக்கின்றது.

மேலும் இத்தேர்வு மேன்பட்ட ஆய்வு அதிகாரியாகிய திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.அருண் மேற்பார்வையிடுவார் என திருச்சி மாநகர காவல்துறை வட்டாரம் தெரிவித்திருக்கின்றது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது: போலீசார் நடவடிக்கை

290 குமரி:  கோட்டார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.செல்வ நாராயணன் கோட்டார் கம்பளம் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்ற நபரை பிடித்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452