இரயிலில் தவறவிட்ட பணப்பையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டு

Admin

விருத்தாசலம்: விருத்தாசலம் இருப்புப்பாதை காவலர் திரு.கண்ணதாசன் அவர்கள் 03.01.2019-ம் தேதியன்று அனந்தபுரி விரைவு இரயிலில் இரவு பணி மேற்கொள்ளும் போது கேட்பாரற்று கிடந்த பணப்பையை எடுத்து பார்த்ததில் சுமார் 1.5 லட்சம் மதிப்புள்ள 5 சவரன் தங்க நகை இருப்பதை கண்டார். உடனே பயணிகளிடம் பை யாருடையது என விசாரித்ததில் கன்னியாகுமரியை சேர்ந்த திருமதி.மரியசெல்வி என்பவருடையது என தெரியவந்ததையடுத்து விருத்தாசலம் இரயில் நிலையம் வந்ததும் மரியசெல்வியிடம் செயின் ஒப்படைக்கப்பட்டது.

இத்தகவலை அறிந்த இருப்புப்பாதை காவல்துறை கூடுதல் இயக்குநர் முனைவர்.திரு.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் திருமதி.மகாலட்சுமி, உதவி ஆய்வாளர் திரு.சின்னப்பன் ஆகியோர் நகையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு வெகுமதி வழங்கி பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

பணியின் போது வீர மரணமடைந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த காவல்துறையினரின் வாரிசுகளை கெளரவித்து நற்சான்று

114 தூத்துக்குடி : காவல்துறை பணியின்போது வீர,தீரச்செயல் புரிந்து உயிர் நீத்த காவல் துறையினரின் குடும்பத்தாரை நேற்று (09.01.19) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டியும், கௌரவித்தும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452