இருசக்கர வாகனத்தை திருடிய 2 இளைஞர்கள் கைது

Prakash

நெல்லை: ரோஸ்மியாபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 40).இவர் சம்பவத்தன்று பணகுடி பஜாரில் பொருட்கள் வாங்குவதற்காக தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் பணகுடி நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பணகுடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களை போலீசார் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அழகியநம்பிபுரம் நடராஜன் மகன் அருண் (21), சர்வோதயா தெரு சுப்பிரமணியன் மகன் கௌதம் என்ற சங்கர்(20)என்பதும் இவர்கள் பணகுடியில் ராஜேஷுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை திருடியதும் தெரிய வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திண்டுக்கல் அருகே பெயிண்டர் படுகொலை

265 திண்டுக்கல்:  திண்டுக்கல் அடுத்துள்ள அச்சராஜாக்காப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா, 23 .இவர் பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். மாலப்பட்டியை சேர்ந்தவர்கள்  கங்காதரன், சிரஞ்சீவி, முருகேசன் இவர்கள் நான்கு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!