இருசக்கர வாகனத்தை திருடிய 2 பேரை கைது செய்த போலீசார் சிறையில் அடைப்பு

Admin

திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வசந்தன் இவர் திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே முன்பதிவு மையத்தில் டிக்கெட் எடுக்க சென்றபோது வெளியே நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனத்தை காணவில்லை என திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு திருவொற்றியூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் காட்சிகளை ஆய்வு மேற்கொண்டபோது திருவொற்றியூர் பூங்காவனபுரம் பகுதியை சேர்ந்த ஜெகன் மற்றும் காஜாமொய்தீன் ஆகிய 2 பேரும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

விசாரணையில் இதுபோன்று ரயில் நிலையங்கள் பேருந்து நிலையங்கள் இருந்து இரு சக்கர வாகனங்களை திருடி உடனடியாக இருசக்கர வாகனத்தை பார்ட் பார்ட்டாக பிரித்து ஆறு மணி நேரத்தில் விற்பனை செய்யும் பலே திருடர்கள் என்றும் இவர்கள் இதே போன்று தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. ரயில்வே எல்லைக்குள் திருடு நடந்ததால் இந்த வழக்கை விசாரிப்பது யார் என்ற பிரச்சனையும் உள்ளது ரயில்வே போலீசார் இங்கே வாகனத்தை நிறுத்தாதீர்கள் என கூறுகின்றனர் சென்னை மாநகர போலீசாரும் ரயில்வே இடம் என்பதால் நாங்கள் உடனே வழக்குகள் எடுத்துக் கொள்ள முடியாது எனவும் சொல்கின்றனர்.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

விபத்தில்லா சென்னை பெருநகரை உருவாக்க ஆணையர் வேண்டுகோள்

324 குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்துக்கள் ஏற்படுவதையும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் உயிரிழப்புகளையும் குறைக்கும் வகையில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை, போக்குவரத்து விதிகளை அமல்படுத்த […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452