கடலூரில் 4 மூட்டை குட்கா பறிமுதல்

Admin

கடலூர்: கடலூரில் உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனையில் நான்கு மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

கடலூர் பேருந்து நிலையத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், சில பெட்டி கடைகளில் குட்கா விற்பது கண்டுபிடிக்கப்பட்டது .

இது குறித்து விசாரித்த போது கடலூர் தேரடி தெருவில் உள்ள ஹஷ்முக் ஏஜென்சிஸ் என்ற கடையில் விற்பனை செய்வது தெரிய வந்தது.

இதனை அடுத்து அங்கு சென்ற உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில் 4 மூட்டை குட்கா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .

அதை பறிமுதல் செய்த அதிகாரிகள் உரிமையாளர் அசோகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

விசாகப்பட்டினத்தில் தமிழக காவலர் படுகொலை

52 விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மதுரையை சேர்ந்த காவலர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆயுதப்படை காவலர் நீலமேக அமரனை கொன்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452