கடலூர் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Admin

கடலூர்: கடலூர் கோண்டூர் டி.என்.எஸ்.டி.சி. நகரை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் திருஞானசம்பந்தமூர்த்தி (34) இவர் கடந்த மாதம் 19–ந்தேதி செல்லங்குப்பம் மெயின்ரோடு வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தார்.

அப்போது அவரை சின்னபிள்ளையார்மேடு மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த காசிநாதன் மகன் விக்கி என்கிற விக்னேஷ் (24) என்பவர் வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி ரூ.500–யை வழிப்பறி செய்தார். இது பற்றி திருஞானசம்பந்தமூர்த்தி கடலூர் முதுநகர் காவலில் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட விக்னேஷ் மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளது. இது தவிர குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் ஆள் கடத்தல் வழக்கு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவர் தொடர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கடலூர் முதுநகர் காவல் ஆய்வாளர் திரு.சீனிபாபு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமாருக்கு பரிந்துரை செய்தார். அவர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து தொடர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த விக்கி என்கிற விக்னேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ராஜேஷ் உத்தரவிட்டார். அதன்படி முதுநகர் காவல் ஆய்வாளர் திரு.சீனிபாபு, விக்னேசை குண்டர் சட்டத்தில் கைது செய்து, அதற்கான ஆணையை அவரிடம் கடலூர் மத்திய சிறை அலுவலர்கள் மூலம் காவல்துறையினர் வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

சபாஷ் ஒரு சல்யூட்

67 இரண்டு காவல் உயர் அதிகாரிகள் கைகுலுக்குவதும்– ஒருவரிடமிருந்து இன்னொருவர் பொறுப்பை ஏற்றுக் கொள்வதும்– இருவரும் பரஸ்பரம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதும், புது வி‌ஷயம் இல்லை. ஆனால் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452