கத்தி முனையில் கைவரிசை, இரண்டு நபர்கள் கைது

admin1
 சென்னை :  திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் (30),  என்பவர் சென்னையில், தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து,  தங்கி வருகிறார். சந்தோஷ் கடந்த (09.05.2022), அன்று அவரது திருமண அழைப்பிதழை உறவினர் வீட்டில் கொடுத்துவிட்டு,  இருசக்கர வாகனத்தில் திரும்பி வரும்போது, இரவு சுமார் 10.00 மணியளவில், அக்கரை சோதனைச்சாவடி,  அருகே சென்றபோது, ஆட்டோவில் வந்த 4 நபர்கள்,  சந்தோஷை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 2 சவரன் தங்கச்சங்கிலியை,  பறித்துக் கொண்டு, ஆட்டோவில் தப்பிச் சென்றனர். இது குறித்து சந்தோஷ் நீலாங்கரை காவல் நிலையத்தில், புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
நீலாங்கரை காவல் ஆய்வாளர் தலைமையிலான, காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை,  தீவிரமாக ஆய்வு செய்து, எதிரிகள் சென்ற ஆட்டோவின் பதிவு எண்,  மற்றும் அடையாளங்களை வைத்து, மேற்படி வழிப்பறி குற்றத்தில் ஈடுபட்ட  சிவகுமார் (23),  பனையூர், சென்னை, உமர்பரூக் (25),  பனையூர், கார்த்திக் (29), கண்ணகிநகர்,  கே.கார்த்திக் (21), கண்ணகிநகர், ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகார்தாரரின் 2 சவரன் தங்கச்சங்கிலி,  குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 ஆட்டோ மற்றும் 1 கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.  மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை,  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கோயில் நிலம்த்தை ரூ.2.75 கோடிக்கு, மோசடி செய்த தம்பதியினர் கைது

5 சென்னை :  சென்னை ஆலந்தூரை சேர்ந்த பிரசாந்த், என்பவர் (M / S . Prashanth homes) என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார்.  […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452