காவல் நிலையம் நூற்றாண்டு விழா, IG வரதராஜு தலைமையில் கொண்டாட்டம்

Admin

கரூர்: கரூர் மாவட்டம் க.பரமத்தி காவல் நிலையம் ஆரம்பித்து நூறு ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, திருச்சி சரக காவல்துறை தலைவர் திரு. வரதராஜு  அவர்கள் மற்றும் காவல்துறை துணைத் தலைவர் திரு. பாலகிருஷ்ணன்  அவர்களின் தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு .அன்பழகன் அவர்கள் மற்றும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பாண்டியராஜன் அவர்கள் உடன் காவல் துறை சார்பாக நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் மரக்கன்று நடுதல் , அந்தப் பகுதி மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தியும் , பள்ளி மாணவ மாணவிகளுக்கு உபகரணங்கள் வழங்கியும்,விளையாட்டுப் போட்டிகள் நடத்தியும் நூற்றாண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது .மேலும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் நூற்றாண்டு விழாவில் செய்தியாளர்களிடம் கூறப்பட்டது .

Leave a Reply

Your email address will not be published.

Next Post

தர்மபுரியில் ஐ.ஜி தலைமையில் ஆய்வுக் கூட்டம்

33 தர்மபுரி: தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குற்ற வழக்குகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் கோவை மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் திரு.பெரியய்யா,இ.கா.ப அவர்கள் தலைமையில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452