காவலர்களின் சிறப்பான செயலை பாராட்டி சான்றிதழ்

Prakash

வேலூர்: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் பள்ளிகொண்டா காவல் நிலைய ஆய்வாளர் திருமதி மனோன்மணி அவர்களின் தலைமையிலான காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது.

அவ்வழியாக வந்த சந்தேகத்திற்கிடமான கார் மற்றும் கண்டைனர் வாகனங்களை வழிமறித்து சோதனை செய்து சுமார் கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை கைப்பற்றினர்.

இக்கடத்தலில் ஈடுபட்ட 6 நபர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அதில் மூன்று நபர்கள் ஆன தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கோபால் தந்தை பெயர் சின்னதுரை தாம்பரம் பெருங்களத்தூர் ஐ சேர்ந்த ராஜா குருவி தந்தை பெயர் குண்டு மழை விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த குமார் தந்தை பெயர் சேட்டு ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்து.

மீதமுள்ள குற்றவாளிகளான தர்மன் ஞானராஜ் சசிகுமார் ஆகியோரை தேடி வருகிறார்கள் மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் கண்டைனர் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

காவலர்களின் சிறப்பான இச் செயலை பாராட்டும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு செல்வகுமார் அவர்கள் இன்று மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரடியாக வரவழைத்து அவர்களை வெகுவாக பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

புகையிலை பொருட்கள் விற்பனை இருவர் மீது வழக்கு

297  ஈரோடு: பெருந்துறையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை இருவர் மீது வழக்குபதிவு செய்தனர். பெருந்துறை தினசரி மார்க்கெட்டில் கடை நடத்திவரும் ஜேசுராஜ் செல்வின்(26) என்பவர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!