காவலர்களின் பாதுகாவலனாக செயல்படும் திருவள்ளூர் SP திரு.அரவிந்தன், IPS

Admin

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் இளம் ஐ.பி.எஸ் அதிகாரி திரு.அரவிந்தன் அம்மாவட்ட காவலர்கள் மத்தியில் மட்டுமல்லாது, தமிழக காவலர்களின் பாராட்டுக்கு உள்ளாகியுள்ளார். B7 வெள்ளவேடு காவல்நிலைய காவலர் கோபி அவர்கள், உடல்நிலை பாதிக்கபட்டு, மிகவும் மேரசமான நிலையை அடைந்தார். இதனை அறிந்த திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன் அவர்கள் வெள்ளவேடு காவல்நிலைய ஆய்வாளர் திரு வெங்கடேசன் அவர்களின் உதவியோடும், திருவள்ளூர் மாவட்ட காவலர்களின் மாபெரும் உதவியோடும் உடல்நிலை பாதிப்படைந்த காவலருக்கு உதவி செய்யும் எண்ணத்தோடு இரண்டு லட்சம் ரூபாய் உதவிகரமாக வழங்கினார்.

மேலும் இவ்விஷயத்தை கேள்விபட்ட சக காவலர்கள், காவல்துறை ஒரு குடும்பம் என்பது போல் செயல்பட்ட பெருமதிப்பிற்குரிய திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர். அவரது பணி சிறக்க போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்

 

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

 

 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

அப்துல்கலாம் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மரம் நடு விழா

29 சென்னை: முன்னாள் பிரதமர் நேருவுக்குப் பிறகு குழந்தைகளுக்கு அதிகம் பிடித்த தலைவர் என்றால் அது முன்னாள் குடியரசுத் தலைவர் Dr.APJ.அப்துல் கலாம் அவர்கள். Dr.APJ.அப்துல்கலாம் அவர்களின் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452