காவலர்களுக்கான இலவச பஸ் பாஸ் திட்டம்

Prakash

தமிழக முதல்வர் சட்டசபையில் அறிவித்திருந்த, ‘காவலர்களுக்கான இலவச பஸ் பாஸ் திட்டத்தை’ அமல்படுத்துவது தொடர்பாக விவரங்களை கேட்டு தமிழக காவல்துறை டி..ஜி.பிக்கு போக்குவரத்து துறை கடிதம் அனுப்பியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் சட்டசபையில் காவலர்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதில் ஒன்றாக இரண்டாம் நிலை காவலர் முதல் ஆய்வாளர் வரை அரசு பேருந்தில் காவலர் அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

இந்த அறிவிப்பிற்கு தமிழகம் முழுதும் முதல்வருக்கு காவல்துறை தரப்பில் பாராட்டுக்கள் குவிந்தன. இந்த அறிவிப்பை அமல்படுத்தும் வகையில் தமிழக போக்குவரத்து துறை துணைச் செயலாளர் திரு.உதய பாஸ்கர், தமிழக டி.ஜி.பிக்கு கடிதமொன்று அனுப்பியுள்ளார்.

அதில் முதல்வர் சட்டசபையில் அறிவித்த காவலர்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை அமல்படுத்துவதற்கு, பேருந்தில் பயணம் செய்யும் காவலர்கள் எண்ணிக்கை மற்றும் விவரங்களை அனுப்புமாறு கேட்டுள்ளார்.

முதல்வரின் இந்த திட்டத்தை அமல்படுத்துவதால் நிதி இழப்பை ஈடு செய்ய வேண்டிய நிலையில் இருப்பதால் பயன்பெறும் காவலர்களின் விவரங்களை போக்குவரத்துத்துறை கேட்டுள்ளது. குறிப்பாக சென்னையை பொருத்தவரையில் ஏசி பேருந்தை தவற இலவசமாக மாதம் முழுவதும் அனைத்து மாநகர பேருந்தில் பயணம் செய்வதற்கும்.

மற்ற மாவட்டங்களை பொருத்தவரையில் விலையில்லா பயணச்சீட்டு மூலம் பெண்கள் திருநங்கைகள் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் திட்டத்தின்கீழ் காவலர்கள் சேர்க்கப்பட்டு பயன் பெறலாம் என போக்குவரத்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திட்டத்தின் மூலம் ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் காவலர்கள் இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்வதற்கான கட்டண செலவை கணக்கிடுவதற்கு ஏதுவாக.

தமிழகம் முழுவதும் பேருந்தில் இலவசமாக பயணம் செய்வது தொடர்பாக, சம்பந்தப்பட்ட இரண்டாம் நிலை காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான காவல்துறையினரின் விவரங்களை பட்டியலிட்டு அனுப்புமாறு போக்குவரத்து துறை துணைச் செயலாளர் தமிழக டி.ஜி.பி.திரு.சைலேந்திரபாபுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.


சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வாகன ஓட்டிகளுக்கு, விழிப்புணர்வு

286 திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் போக்குவரத்து ஆய்வாளர் திரு.தட்சணாமூர்த்தி தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும், வாகனம் ஓட்டும் போது மிதமான வேகத்தில் செல்லவும், வாகன ஓட்டி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452