காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ஒரு கோடி நிவாரணம் முதல்வர் அறிவிப்பு

Admin

திருச்சி : திருச்சி அருகே ஆடு திருடர்களை விரட்டிச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் திரு பூமிநாதன் இன்று அதிகாலை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பூமிநாதன். இவர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார் அப்போது கீரனூர் அருகே பள்ளபட்டி பகுதியில் தலையில் வெட்டுக் காயத்துடன் அதிகளவு ரத்தம் வெளியேறிய நிலையில் சடலமாக கிடந்தார் எல்லைப் பகுதியில் இருந்து ஆட்களை ஏற்றி வந்த இருசக்கர வாகனங்களை பூமிநாதன் துரத்தி வந்தபோது, அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டி இருக்கக்கூடும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து டிஎஸ்பிக்கள் சிவசுப்ரமணியன், அருள்மொழி அரசு தலைமையில் 2 ஆய்வாளர்கள் இரண்டு உதவி ஆய்வாளர்கள் அடங்கிய 4 தனிப்படைகள் கொலையாளிகளை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் திருடர்களை விரட்டி பிடிக்க சென்றபோது வெட்டிக்கொலை செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு ஒரு கோடி நிவாரண மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க இருப்பதாக முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. நிஷாந்த்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

வாகன சோதனையின்போது நிற்காமல் அதிவேகமாகச் சென்ற வேன் மோதியதில், மோட்டார் வாகன ஆய்வாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

925 கரூர்: கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் கனகராஜ் 57. இவர் நவ.22 இன்று காலை 9.30 மணியளவில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452