கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு.

Prakash
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செட்டிநாயக்கன்பட்டி EB காலனி அருகே கடந்த 22.09.2021 ம்தேதி அதே பகுதியைச் சேர்ந்த நிர்மலாதேவி என்பவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 நபர்களை காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் 6 நபர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள சீவல்சரகுயைச் சேர்ந்த சங்கிலி கருப்பன் 28 ,தமிழ் செல்வன் 22, அலெக்ஸ் பாண்டி 19. நிலக்கோட்டையைச் சேர்ந்த முத்துமணி 23. மற்றும் வடமதுரையைச் சேர்ந்த ரமேஷ்குமார் 33. ஆகிய 5 நபர்களின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு.விசாகன், இ.ஆ.ப. அவர்கள் 5 நபர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். இதனையடுத்து தாடிக்கொம்பு காவல் நிலைய போலீசார் 5 நபர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வெள்ளப் பெருக்கில் சிக்கிய நான்கு சிறுவர்களை பத்திரமாக மீட்ட தீயணைப்பு மீட்பு படையினர்

284 தேனி: தேனி மாவட்டம் போடி உட்கோட்டம் போடி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அணைப் பிள்ளையார் ஆற்றில் நான்கு சிறுவர்கள் குளித்துக்கொண்டிருந்த பொழுது குரங்கணி மலைப்பகுதியில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452