சிதம்பரத்தில் துப்பாக்கியை காட்டி போலீசாரை மிரட்டிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

Admin

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல்துறையினர் கடந்த 18–ந்தேதி ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கோவிந்தசாமி நகர் பகுதியில் ஒருவரிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் பிடிக்க முயன்றனர். உடனே அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து, காட்டி, ‘என்னை நெருங்கி வந்தால் சுட்டுவிடுவேன்’ காவல்துறையினரை மிரட்டினார். தொடர்ந்து காவல்துறையினர் அவரை சுற்றிவளைத்து மடக்கிபிடித்தனர்.

அவரிடம் விசாரித்ததில், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள திருமிஞ்சூர் வடபாதி நகரை சேர்ந்த பாடலி என்கிற பாடலீசுவரன் (37) என்பது தெரியவந்தது. மேலும் இவர் அண்ணாமலைநகர் பகுதியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் மீது அண்ணாமலை நகர், சிதம்பரம், பேரளம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் இவரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதற்கடையே பாடலீசுவரனின் இத்தகைய செயல்களை தடுக்கும் வகையில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் ராஜேஷ் உத்தரவிட்டதை அடுத்து, அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் திரு.ரதேஷ்ராஜ், கடலூர் சிறையில் உள்ள பாடலீசுவரனை குண்டர் சட்டத்தில் கைது செய்தார்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

முதல்வர் உடல்நிலை:காவல்துறை எச்சரிக்கை!

77 சென்னை : முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452