சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்–அமைச்சரின் சிறப்புபணி பதக்கங்கள் பெறும் காவல் துறை அதிகாரிகள் தமிழக அரசு அறிவிப்பு

Admin

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்–அமைச்சரின் சிறப்புபணி பதக்கங்கள் பெறும் காவல் துறை அதிகாரிகள் பெயர் பட்டியலை தமிழக அரசு அறிவித்துள்ளது. புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட காவல் அதிகாரிகளுக்குச் சுதந்திரதினத்தை முன்னிட்டு தமிழக முதல்–அமைச்சரின் காவல் புலன்விசாரணைக்கான சிறப்புபணி பதக்கங்களை வழங்கிட முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

திரு.எஸ்.அரவிந்த் (கூடுதல் காவல் கண்காணிப்பாளர், போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு, அயல்பணி, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை). திரு.என்.சிலம்பரசன், (காவல் துணைக் கண்காணிப்பாளர், திண்டிவனம் உட்கோட்டம், விழுப்புரம் மாவட்டம்). திரு.மா.விவேகானந்தன் (காவல் துணைக் கண்காணிப்பாளர், உடுமலைப்பேட்டை உட்கோட்டம், திருப்பூர் மாவட்டம்). திரு.மு.சோமசுந்தரம் (காவல் துணைக் கண்காணிப்பாளர், வாழப்பாடி உட்கோட்டம், சேலம் மாவட்டம்).

எஸ்.ஸ்ரீமதி (காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, திருப்பூர்). திரு.டி.சரவணக்குமார் (காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, ராமநாதபுரம் மாவட்டம்). திரு.அ.தர்மலிங்கம் (காவல் ஆய்வாளர், தனிபிரிவு, விருதுநகர் மாவட்டம்). திரு.த.ஜோதி (காவல் ஆய்வாளர், தொடர் குற்ற குழு, கோயம்புத்தூர் மாநகர்). ரே.ஹேமலதா (காவல் ஆய்வாளர், ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையம், திருச்சி மாவட்டம்). இதேபோன்று, பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய காவல் துறை அதிகாரிகளுக்கு அவர்களது பணியைப் பாராட்டி, சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதல்–அமைச்சரின் காவல் பதக்கம் வழங்க முதல்–அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

திரு.ஜே.கே.திரிபாதி (காவல்துறை கூடுதல் இயக்குநர், சட்டம் மற்றும் ஒழுங்கு, சென்னை). திரு.என்.கே.செந்தாமரைகண்ணன் (காவல்துறை தலைவர், வடக்கு மண்டலம், சென்னை). திரு.த.செந்தில்குமார் (காவல்துறை துணைத் தலைவர், தஞ்சாவூர் சரகம்). திரு.ந.மா.மயில்வாகனன் (காவல் கண்காணிப்பாளர், திருவாரூர் மாவட்டம்). திரு.சி.பாஸ்கர் (உதவி காவல் ஆணையாளர், கீழ்ப்பாக்கம், சென்னை).

விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவரும் தலா 8 கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் பெறுவார்கள். மேற்கண்ட விருதுகள், முதல்–அமைச்சர் பங்கேற்கும் சிறப்பு விழாவில் மேற்சொன்ன காவல் துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

சுதந்திர தினத்தையொட்டி, தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பு

57 கடலூர்: நாடு முழுவதும் நாளை(திங்கட்கிழமை) சுதந்திரதின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கொண்டாட்டத்தின் போது தீவிரவாதிகள், நாசவேலைகளில் ஈடுபடக்கூடும் என்பதால், நாடு முழுவதும், உஷார் படுத்தப்பட்டு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452