சென்னை கிரைம்ஸ் 18/04/2021

Admin

வியாசர்பாடி பகுதியில் மாவா விற்பனை செய்த ஒருவர்,  P3 வியாசர்பாடி காவல் குழுவினரால் கைது

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான “DAD – DRIVE AGAINST DRUGS ” –ன் தொடர்ச்சியாக, P3 வியாசர்பாடி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த தகவலின் பேரில், காவல் குழுவினர் 16.4.2021 அன்று மதியம், வியாசர்பாடி, சாமியார் தோட்டம் 4வது தெருவில் கண்காணித்தபோது, அங்கு மாவா புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த விக்ரம், வ/33, வியாசர்பாடி என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 6 கிலோ 500 கிராம் எடை கொண்ட மாவா கைப்பற்றப்பட்டு, அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


மாதவரம் பகுதியில் ஒருவர், போக்சோ சட்டத்தில் W33 மாதவரம் அனைத்து மகளிர் காவல் குழுவினரால் கைது

மாதவரத்தைச் சேர்ந்த சிறுமியை 12.4.2021 அன்று கடைக்கு சென்றபோது, கந்தன் என்பவர் காதலிக்க சொல்லி வற்புறுத்தி, கையை பிடித்து இழுத்து தகராறு செய்தது தொடர்பாக, சிறுமியின் தாய் W33 மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், W-33 மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து, சிறுமியை காதலிக்கும்படிதொந்தரவு செய்து, கையை பிடித்து இழுத்த கந்தன், வ/34,மாத்தூர், என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


அண்ணா நகர் பகுதியில் ஒருவர்,  போக்சோ சட்டத்தில் W7 அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் குழுவினரால் கைது

அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சிறுமியை கடந்த 06.04.2021 அன்று பின் தொடர்ந்து சென்ற முத்து என்பவர் காதலிக்க சொல்லி வற்புறுத்தி, கையை பிடித்து இழுத்து தகராறு செய்தது தொடர்பாக, சிறுமியின் தாய் W7 அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டது. W7 அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து, சிறுமியை காதலிக்கும்படிதொந்தரவு செய்து, கையை பிடித்து இழுத்த முத்து , வ/34,மதுரவாயல் என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


மாதவரம் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய 2 நபர்கள் M1 மாதவரம் காவல் குழுவினரால் கைது

சென்னை, எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்த அரவிந்த், வ/26, என்பவர் கடந்த 30.03.2021 அன்று காலை மாதவரம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் அவரது இருசக்கர வாகனத்தை, வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது, அவரது இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது தொடர்பாக அரவிந்த் M1 மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. M1 மாதவரம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, இருசக்கர வாகனத்தை திருடிய 1.விஜி, வ/32, வியாசர்பாடி 2.சுரேஷ் (எ) காகிதம் சுரேஷ், வ/35, வியாசர்படி ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள 3 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

“குண்டர் காவல்“ தடுப்பு சட்டத்தில் கைது

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.அவ்வாறு, தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட 1.சதிஷ் (எ) சதிஷ்குமார், வ/32, பொத்தூர் 2.பரத், வ/24, பொன்னேரி ஆகிய 2 நபர்கள் மீது M4 செங்குன்றம் காவல் நிலையத்திலும், 3.சீனிவாசன் (எ) அறுப்பு சீனு, வ/34, செங்குன்றம் என்பவர் மீது T4 மதுரவாயல் காவல் நிலையத்திலும், 4.ராபர்ட் (எ) சின்ன ராபர்ட், வ/22, அண்ணாநகர் கிழக்கு என்பவர் மீது K4 அண்ணாநகர் காவல் நிலையத்திலும், 5.கணேஷ்குமார் (எ) கணேஷ், வ/29, அம்பத்தூர் என்பவர் மீது T3 கொரட்டூர் காவல் நிலைய குற்றப்பிரிவிலும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டதால், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப, அவர்கள், மேற்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய 16.04.2021 அன்று உத்தரவிட்டதின்பேரில், மேற்படி 5 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

பணம் திருடிய 3 நபர்கள் E4 அபிராமபுரம் காவல் குழுவினரால் கைது

சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசமூர்த்தி, வ/29, என்பவர் கடந்த 04.4.2021 அன்று தனது பால்பூத் கடையை பூட்டிவிட்டு சென்று சில மணி நேரங்கள் கழித்து வந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கடையின் கல்லாவில் வைத்திருந்த பணம் ரூ.14,500/- திருடு போயிருந்தது தொடர்பாக கணேசமூர்த்தி, E4 அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. E4 அபிராமபுரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 1.கார்த்திக் (எ) அவதார் கார்த்திக், வ/23, தி.நகர், 2.வசந்தகுமார் (எ) அம்மி, வ/23, தி.ந்கர், 3.மணி (எ) நரி, வ/22, தேனாம்பேட்டை ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். குற்றவாளிகளிடமிருந்து 2 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, அவர்கள்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

காவல்துறையினருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி சிறப்பு முகாம்

388 தூத்துக்குடி :தூத்துக்குடி காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான ‘கோவிஷீல்டு” தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452