சைபர் க்ரைம் சம்பந்தமான விழிப்புணர்வு

Prakash

நாகை: திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.V. பாலகிருஷ்ணன் இகாப, அவர்கள் சிறப்பு விருந்தினர் (In video conference) நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கு.ஜவஹர்.இகாப., அவர்கள் சிறப்பு விருந்தினர் (In live) மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். திருநாவுக்கரசு அவர்கள் ஒருங்கிணைப்பில் நாகப்பட்டினம் மாவட்டம் EGS பிள்ளை கல்வி நிறுவனத்தில் இன்று 20.01.2022 ம் தேதி சைபர் கிரைம் சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் முறையில் மோசடியாளர்களால் ஏமாற்றப்பட்டால் உடனடியாக 155260 என்ற இலவச எண்ணிற்கு அழைத்து மோசடியான பணப்பரிவர்த்தனை விவரங்களைத் தெரிவித்தால் பாதிக்கப்பட்ட நபரின் பணம் குற்றவாளிகளால் பயன்படுத்த முடியாதவாறு தடுக்கப்பட்டு அவர்களின் வங்கி கணக்கிற்கு திருப்பப்படுவது குறித்தும், பெண்களுக்கெதிரான இணைய வழிக் குற்றங்கள் அவற்றை கையாளும் முறை குறித்தும் இளைஞர் சமுதாயம் தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. மேலும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலம் புகார் அளிப்பது குறித்து விளக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கட்டுப்பாடுகளை மீறி முக கவசம் அணியாத 402 பேருக்கு அபராதம்

296 தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (20.01.2022) தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி முக கவசம் அணியாத 402 பேருக்கு அபராதம் ரூபாய் 80,400/-ம், சமூக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452