டிரைவர் கொலை வழக்கில் 2 பேர் கைது பரபரப்பு வாக்குமூலம்

Admin

கடலூர்: சென்னை தண்டடையார்பேட்டை பல்லவன்நகரை சேர்ந்தவர் தணிகாசலம். வினோத் கடலூர் முதுநகரில் உள்ள பெண்ணை காதல் திருமணம் செய்து அவரை விட்டு பிரிந்து சென்னையில் உள்ள ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். அவர் இறந்தபிறகு 3-வதாக கடலூர் சிங்காரத்தோப்பை சேர்ந்த சுருதி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்தார். இவர்களுக்கு 1½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் சிங்காரத்தோப்பு மீனவ கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகளை கடத்தி சென்றதாக அவர் மீது கடலூர் முதுநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த அவர் கடந்த 28-ந்தேதி கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள பஞ்சர் கடைக்கு செல்வதாக கூறி சென்றார். அதன்பிறகு அவர் மாயமாகி விட்டார்.

இதைத்தொடர்ந்து கடந்த 3-ந்தேதி மாலையில் சோனாங்குப்பம் கடலில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தார். அவரது உடல் சற்று நேரத்தில் கரை ஒதுங்கியது. அவரை யாரோ கொலை செய்து கடலில் வீசியது தெரிய வந்தது. இது பற்றி தகவல் அறிந்த கடலூர் துறைமுகம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தது மாயமான வினோத் தான் என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர். மேலும் வினோத்தின் தந்தையும் இறந்தது தன்னுடைய மகன் தான் என்பதை உறுதிபடுத்தினார்.

பின்னர் இது பற்றி கடலூர் துறைமுகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். 2 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. தனிப்படை காவல்துறையினரும் தீவிரமாக குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சிங்காரத்தோப்பை சேர்ந்த ரமேஷ் (45) என்பவர் புதுநகர் போலீசில் சரண் அடைந்தார். அவரை துறைமுகம் போலீசில் புதுநகர் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இந்த கொலையை அவருடன் சேர்ந்து நண்பர் அதே ஊரை சேர்ந்த கார்த்திகேயன் மகன் செல்வம் (27), உறவினர் தேன்மொழி, அன்னவெளி ரகு என்கிற ரகுநாதன் ஆகியோர் செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ரமேசை காவல்துறையினர் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய படகு, 2 மோட்டார் சைக்கிள்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ரமேஷ் காவல்துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

என்னுடைய மகளை வினோத் கடத்தி, தொந்தரவு செய்து வந்தார். பின்னர் இது பற்றி போலீசில் புகார் செய்து அவளை மீட்டோம். வினோத் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் எங்கள் வீட்டு பெண்களுக்கு தொல்லை கொடுத்து வந்தார். செல்போனில் பேசுமாறு கட்டாயப்படுத்தி வந்தார். பல முறை எச்சரித்தும் வினோத் கண்டுகொள்ளவில்லை. இதற்கிடையில் உறவினர் பெண் ஒருவரை கடத்தி சென்று விடுவதாக மிரட்டிச்சென்றார்.

தொடர்ந்து எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்ததால் நாங்கள் மிகுந்த மனவேதனை அடைந்தோம். அவர் கூறியபடியே சம்பவத்தன்று எங்கள் குடும்பத்தை சேர்ந்த பள்ளி மாணவியை ஆட்டோவில் கடத்தி செல்ல முற்பட்டார். உடன் அவள் எங்களிடம் அழுதபடி தெரிவித்தார்.

இதையடுத்து நாங்கள் அவரை 2 மோட்டார் சைக்கிளில் சென்று துரத்தி பிடித்தோம். பின்னர் வினோத்தை தாக்கினோம். இதில் அவர் மயங்கினார். உடன் அவரின் கை, கால்களை கட்டி படகில் ஏற்றிச் சென்று கடலில் வீசி விட்டு வந்து விட்டோம். காவல்துறையினர் எப்படியும் எங்களை கைது செய்து விடுவார்கள் என்று போலீசில் சரண் அடைந்து விட்டேன்.

இவ்வாறு ரமேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதேபோல் ரமேஷ் கொடுத்த தகவலின் பேரில் செல்வத்தையும் நேற்று காவல்துறையினர் கைது செய்தனர். அவரும் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட ரமேஷ், செல்வம் ஆகிய 2 பேரையும் துறைமுகம் காவல் ஆய்வாளர் ஆண்டவர், காவல் உதவி-ஆய்வாளர் பழனிவேல் மற்றும் காவல்துறையினர் நேற்று கடலூர் மாஜிஸ்திரேட்டு 2-வது கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் 2 பேரும் மாஜிஸ்திரேட்டு உத்தரவின்பேரில் 15 நாங்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள தேன்மொழி, ரகு என்கிற ரகுநாதன் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

மூன்று காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆணையர் திரு.ஏ.கே.விசுவநாதன் ஆகியோருக்கு விருது

55 சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தின் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளிக்கான மாநாடு 4ஆண்டுகளுக்கு பிறகு 3 நாள் தொடர்ச்சியாக நடைபெற்றது. இதன் நிறைவு […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452