தமிழகக் காவல்துறை இயக்குநர் (DGP) கலந்து தலைமையில் நடத்தப்பட்ட ‘காவலர் பொங்கல் விழா’

Admin

தமிழகக் காவல்துறை இயக்குநர் (DGP) திரு.T.K. இராஜேந்திரன் I.P.S சென்னை ஆவடியில் அமைந்துள்ள தமிழ்நாடு சிறப்புக்காவல் படை வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். இவ்விழாவில் காவல்துறை இயக்குநர் முதல் காவல் ஆளினர்கள் வரை அனைவரும் தங்களது குடும்பத்துடன் கலந்துக்கொண்டனர்.

இவ்விழாவில் காவலர்களின் கலைத்திறமைகளை வெளிக்கொண்டுவரும் விதமாக நடத்தப்பட்ட ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன.

மேலும் இவ்விழாவை ஒட்டி நடைபெற்ற வீர விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற காவலர்களுக்கு, தமிழக காவல்துறை இயக்குநர் திரு.T.K. இராஜேந்திரன் I.P.S அவர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

அவர் தனது உரையில் தமிழகக் காவல் துறையினருக்கும் தமிழக மக்களுக்கும் தனது பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

ஆண், பெண் காவலர்கள் சமத்துவ பொங்கல் வைத்து மேளதாளங்களுடன் கலகலப்பாக்கிய இவ்விழாவில் காவல் துறையினர், காவலர் குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

காவல்துறையினரை ஊக்குவிக்கும் படியாக 'தமிழக முதல்வரின் காவல் பதக்கங்கள்'

489 சென்னை:பொங்கல் பண்டிகையை ஒட்டி, காவல் துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறை பணியாளர்கள், 1,686 பேருக்கு, ‘தமிழக முதல்வரின் காவல் பதக்கங்கள்’ அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், காவல், தீயணைப்பு, சிறைத்துறை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452