தமிழகத்தில் உயர் அதிகாரிகள் மாற்றம் :மூன்று அதிகாரிகள் காவல்துறை இயக்குனர்களாக நியமனம்

Admin

தமிழகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் மூன்று அதிகாரிகள் காவல்துறை இயக்குனர்களாக பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசு 14-9-2017 அன்று வெளியிட்ட அறிக்கையில் :-

1. சங்காராம் ஜாங்கிட் – பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குனராக பணியாற்றும் இவர், காவல்துறை இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

2. ஜே.கே.திரிபாதி – தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குனராக உள்ள இவர், காவல்துறை இயக்குனராக ஆக பதவி உயர்வு பெற்றார். தமிழக சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவராக மாற்றப்பட்டு உள்ளார்.

3. சி.கே.காந்திராஜன் – மாநில மனித உரிமை கமிஷன் கூடுதல் காவல்துறை இயக்குனராக பணியாற்றும் இவர், காவல்துறை இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார். மாநில மனித உரிமை கமிஷனின் காவல்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

4. சுஜித்குமார் – சேலம் ஊரக உதவி காவல்துறை கண்காணிப்பாளராக பணிபுரியும் இவர், கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். கோவை நகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

5. ரோஹித்நாதன் ராஜகோபால் – கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உதவி காவல் கண்காணிப்பளரான இவர், கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை அடையாறு துணை ஆணையராக மாற்றப்பட்டு உள்ளார்.

6. பி.சுந்தர வடிவேல் – சென்னை அடையாறு துணை ஆணையராக பணியாற்றும் இவர், சென்னை ஐகோர்ட்டு பாதுகாப்பு பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த பதவி புதிய பதவி ஆகும்.

7. என்.தமிழ்செல்வம் – தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கூடுதல் காவல்துறை இயக்குனராக பணியாற்றும் இவர், தமிழக காவல் வீட்டு வசதி கழகத்தின் தலைவர்-மேலாண்மை இயக்குனராக பதவி ஏற்பார்.

8. விஜய்குமார் – தமிழக காவல் வீட்டு வசதி கழகத்தின் தலைவர்-மேலாண்மை இயக்குனராக பணியாற்றும் இவர், தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

9. சுனில்குமார் சிங் – ஊர்க்காவல் படை கூடுதல் காவல்துறை இயக்குனராக பணியாற்றும் இவர், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குனராக மாற்றப்பட்டு உள்ளார்.

10. கே.வன்னிய பெருமாள் – சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக பதவி வகிக்கும் இவர், தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கூடுதல் காவல்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

11. கருணாசாகர் – பணி அமைப்பு கூடுதல் காவல்துறை இயக்குனராக இருந்த இவர், ஊர்க்காவல் படை கூடுதல் காவல்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

12. ராஜீவ்குமார் – காவல் நவீன மயமாக்கல் கூடுதல் காவல்துறை இயக்குனராக இவர், காவல் நலப்பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குனராக மாற்றப்பட்டு உள்ளார்.

13. பிரதீப் வி.பிலிப் – காவல் நலப்பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குனராக பணியாற்றும் இவர், தமிழக சிவில் சப்ளை சி.ஐ.டி. கூடுதல் காவல்துறை இயக்குனராக பொறுப்பு ஏற்பார்.

14. வினித் தேவ் வான்கடே – காத்திருப்போர் பட்டியலில் இருந்த இவர், சென்னை நவீன மயமாக்கல் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கடலூர் மாவட்ட கடலோர பகுதியில் ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை

91 கடலூர்: பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்காக கடலூர் உள்பட தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடத்தும் பாதுகாப்பு ஒத்திகை 6 மாதங்களுக்கு ஒரு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452