தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Admin

நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருப்பதையொட்டி ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன்படி 6 ஐபிஎஸ் அதிகாரிகள், 1 காவல் உயர் அதிகாரி உட்பட 7 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மாற்றப்பட்டவர்கள் பதவி விவரங்கள்:

1. தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் டிஜிபி மற்றும் திட்ட அலுவலராகப் பதவி வகித்த திரு.ஜாபர்சேட் ,சிபிசிஐடி டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

2. சிபிசிஐடி ஏடிஜிபியாக பதவி வகித்த திரு.அம்ரேஷ் புஜாரி, போலீஸ் அகாடமி ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

3.  உத்தரப் பிரதேசத்திலிருந்து அயல் பணியில் தமிழகம் வந்துள்ள திரு.எஜிலியர்சேன், சென்னை நிர்வாகப் பிரிவு டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

4. சென்னை போலீஸ் போக்குவரத்துக்கழக சிறப்பு அதிகாரியாகப் பதவி வகித்த திரு.சு.அருணாச்சலம், பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

5. உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாகப் பதவி வகிக்கும் திருமதி.சோனல் சந்திரா, பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

6. தமிழ்நாடு கமாண்டோ படை ஏ.எஸ்.பி. திரு.வருண் குமார், எஸ்.பி.யாகப் பதவி உயர்த்தப்பட்டு உணவுக்கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

7. தேனி மாவட்ட காவல் தலைமையிடக் கூடுதல் எஸ்.பி. திரு.பழனிகுமார், எஸ்.பி.யாக பதவி உயர்த்தப்பட்டு பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப்பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

தமிழகத்தில் 5 ADGP-க்கள் DGP-க்களாக பதவி உயர்வு

115 தமிழகத்தில் 5 ஏடிஜிபிக்களுக்கு காவல்துறை இயக்குநர் (டிஜிபி)யாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமை செயலாளர் திரு.நிரஞ்சன் மார்டி […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452