தமிழகம் முழுவதும் 55 டிஎஸ்பிக்கள் அதிரடி மாற்றம் : டிஜிபி உத்தரவு

Admin

சென்னை: தமிழகம் முழுவதும் 55 டிஎஸ்பிக்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து டிஜிபி டி.கே. ராஜேந்திரன் நேற்று மாலை உத்தரவிட்டு உள்ளார். இது பற்றி டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

1. சென்னை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவில் இருந்த உதவி கமிஷனர் சந்திரசேகரன் எஸ்ஆர்எம்சி ரேஞ்ச் உதவி கமிஷனராகவும்,

2. எம்ஆர்எம்சி உதவி கமிஷனராக இருந்த கண்ணன் காஞ்சிபுர மாவட்ட குற்ற ஆவண காப்பகத்திற்கும்,

3. தர்மபுரி பெண் குற்றத்தடுப்பு பிரிவில் இருந்த அர்னால்டு ஈஸ்டர் கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனராகவும்,

4. கீழ்ப்பாக்கத்தில் இருந்த உதவி கமிஷனர் ஹரிகுமார் செம்பியம் உதவி கமிஷனராகவும்,

5. சென்னை தலைமையிடத்தில் இருந்த ராமலிங்கம் மாதவரம் உதவி கமிஷனராகவும்,

6. மாதவரத்தில் இருந்த ஜெயசுப்பிரமணியன் வேலூர் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கும்,

7. தஞ்சாவூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் இருந்த ரகுபதி சென்னை எஸ்பிசிஐடி டிஎஸ்பியாகவும்,

8. திருநெல்வேலி மாவட்ட  அமலாக்கப் பிரிவில் இருந்த செல்லமுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கும்,

9. காஞ்சிபுர மாவட்ட சமூகநீதி மற்றும் மனித உரிமை டிஎஸ்பியாக இருந்த ஜெயராமன் ஆவடி உதவி கமிஷனராகவும்,

10. அரியலூர் சமூகநீதி மற்றும் மனித உரிமை டிஎஸ்பியாக இருந்த பொன்னுச்சாமி சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கும்,

11. சென்னை மேற்கு மதுவிலக்குப் பிரிவில் இருந்த சுந்தரவதனம் சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கும்,

12. சென்னை மத்திய குற்றப்பிரிவில் இருந்த முத்துவேல்பாண்டி நுங்கம்பாக்கம் உதவி கமிஷனராகவும்,

13. நுங்கம்பாக்கம் உதவி கமிஷனராக இருந்த குமார் அரியலூர் மாவட்ட நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பியாகவும்,

14. தேனாம் பேட்டை உதவி கமிஷனராக இருந்த முத்தழகு சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கும்,

15. சென்னை மத்திய குற்றப்பிரிவில் இருந்த சார்லஸ் ஷாம் ராஜதுரை வேப்பேரி உதவி கமிஷனராகவும்,

16. சென்னை மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் இருந்த கெங்கைராஜ் மடிப்பாக்கம் உதவி கமிஷனராகவும்,

17. மடிப்பாக்கம் உதவி கமிஷனராக இருந்த கோவிந்தராஜூ திருமங்கலம் உதவி கமிஷனராகவும்,

18. சென்னை திருமங்கலம் உதவி கமிஷனராக இருந்த காஜா கமில்பாஷா, திருவாரூர் சமூகநீதி மற்றும் மனித உரிமை டிஎஸ்பியாகவும்,

19. மத்திய குற்றப்பிரிவில் இருந்த பிரதீப் சென்னை தலைமையிட எஸ்பிசிஐடி டிஎஸ்பியாகவும்,

20. சென்னை தலைமையிட எஸ்பிசிஐடியாக இருந்த செம்பெடு பாபு பூந்தமல்லி உதவி கமிஷனராகவும்,

21. சென்னை பாதுகாப்பு பிரிவு உதவி கமிஷனராக இருந்த கந்தன் செங்கல்பட்டு டிஎஸ்பியாகவும்,

பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கொலை செய்துவிட்டு பீகாருக்கு தப்பி செல்ல இருந்த நபரை மடக்கி பிடித்தது, சென்னை இரயில்வே போலீஸ்

95 கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் வெங்கரா பகுதியில் பீகாரை சேர்ந்த நௌசாத் என்பவர் குடும்பத்துடன் தங்கி வந்தார். இவர் 06.06.2018-ம் தேதியன்று 11 மணிக்கு குடும்ப […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452