இராணிப்பேட்டை : தமிழக முதல், அமைச்சராக திரு. மு.க.ஸ்டாலின், ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, அரசுத் துறைகளின் சார்பில், கடந்த ஒரு வருடத்தில் செயல்படுத்தப்பட்ட, நலத்திட்ட விவரங்களை தொகுத்து, செய்தி, மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், ஓராண்டு சாதனை மலர் தயாரிக்கப்பட்டுள்ளது. ‘‘ஓயா உழைப்பின் ஓராண்டு,கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி, நிறைவான வளர்ச்சியில் நிலையான பயணம், திராவிட மாடல் வளர்ச்சி, திசையெட்டும் மகிழ்ச்சி’’ என்ற தலைப்பில் தயாராகியுள்ள சாதனை மலரின், வெளியீட்டு விழா ராணிப்பேட்டை, மாவட்ட ஆட்சியர், அலுவலக கூட்டரங்கில் நடந்தது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் திரு.பாஸ்கர பாண்டியன், தலைமை தாங்கி, சாதனை மலரை வெளியிட்டார். அப்போது ஓராண்டில் தமிழக அரசு செய்துள்ள சாதனைகள், பயனாளிகளின் விவரம் குறித்து, துறைவாரியாக அவர் விளக்கம் அளித்தார். விழாவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், திருமதி.தீபா சத்யன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு. குமரேஸ்வரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட, இயக்குனர் திருமதி. லோகநாயகி, வருவாய் கோட்டாட்சியர் திருமதி. பூங்கொடி, மருத்துவ பணிகள் துணை இயக்குனர் திரு. மணிமாறன், முன்னோடி வங்கி மேலாளர் திருமதி அலியம்மா ஆபிரகாம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு. அசோக் உள்பட பலர் கலந்து
கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்