தமிழ்நாடு அதிரடிப்படை

தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதத் தடைச் சட்டம் (தடா), பயங்கரவாதச் தடைச் சட்டம் (பொடா) மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகளை வழிக்காவல் பாதுகாப்பு பணி, மிக முக்கியமானவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணி, முக்கிய நிகழ்ச்சிகளின் போது இதcommர பாதுகாப்புப் பணி ஆகியவற்றை மேற்கொள்வதற்காகத் தமிழ்நாடு அதிரடிப்படை உருவாக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு, மீட்புப் பணி, வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்தல், தேர்தல் பாதுகாப்புப் போன்ற பல்வேறு பணிகளையும் இப்படையினர் செய்து வருகின்றனர். மேலும் காவல் பணிக்கான அகில இந்திய துப்பாக்கிச் சுடும் சாம்பியன்ஷிப் போட்டிகளிலும், காவல் பணிக்கான அகில இந்திய கைத்துப்பாக்கிச் சுடும் போட்டிகளிலும் கலந்து கொண்டனர். இப்பிரிவின் மகளிர் காவல் பணியாளர்கள் துப்பாக்கிச் சுடும் போட்டியிலும், கைத்துப்பாக்கிச் சுடும் போட்டியிலும் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்று சுழற்கோப்பைகளை 2007ஆம் ஆண்டில் கைப்பற்றியுள்ளனர்.

தமிழ்நாடு அதிரடிப்படைப் பயிற்சிப் பள்ளி :
நவீன ஆயுதங்களைக் கையாள்வதற்கும், வெடி குண்டுகளைக் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் நுணுக்கத்கிற்கும் தேவையான அனைத்துப் பயிற்சிகளையும் இப்பள்ளி அளிக்கிறது. ஸ்னீபர் வகை துப்பாக்கிச் சுடுதல், வனப் பகுதியில் தங்கியிருத்தல் ஆகியவற்றுக்கும், நவீன ஆயுதங்கள் மற்றும் நாசவேலைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் போன்றவற்றைத் திறமையாகக் கையாள்வதற்குத் தேவைப்படும் சிறப்புப் பயிற்சிகளை இப்பள்ளி அளித்து, திறமையான அதிரடிப்படை வீரர்களாக உருவாக்கிட உதவுகிறது.

வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்துச் செயலிழக்கச் செய்யும் படை :
வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்துச் செயலிழக்கச் செய்யும் இப்படை திறமை வாய்ந்த நிபுணர்களைக் கொண்டு தமிழ்நாடு அதிரடிப்படை பள்ளியின் சிறப்புப் பிரிவாகச் செயல்படுகிறது. சாதுரியமான தொழில் நுட்பத்துடன் வெடிகுண்டுகளை விரைந்து கண்டுபிடித்து, அவற்றைச் செயலிழக்கச் செய்யும் பணி இப்பிரிவின் சிறப்பம்சமாகும்.

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami