தரச்சான்றிதழ் பெற காத்திருக்கும் ஆர்.கே. பேட்டை காவல் நிலையம்

Prakash

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி உட் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 5 காவல் நிலையம் உள்ளது, இதில் தற்போது திருவள்ளூர் மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையம் தான் ஆர்.கே. பேட்டை காவல் நிலையம் இந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப்புற பகுதிகளில் பாதுகாப்பது இந்த காவல் நிலையத்தின் பணி மேலும் இந்த காவல் நிலையம் உட்பட்ட பகுதிகளில் ஆந்திர மாநில எல்லையில் வருகிறது.

மேலும் வேலூர் ராணிப்பேட்டை மாவட்டம் ஆகிய மாவட்ட எல்லைகள் வருகிறது மாநில நெடுஞ்சாலை என்பதால் இதனால் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்.கே. பேட்டை காவல் நிலையத்திற்கு வருகை தருகிறார்கள்,

வழக்கு சம்பந்தமாக வரும் பொது மக்களை வரவேற்கும் விதமாக தற்போது ஆர்.கே. பேட்டை காவல் நிலையம் , புது நிலையில் நிறைவுடன் ஜொலித்து வருகிறது அதனை இங்கு காண்போம்,

இதில் முதன்மையாக ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராவை கொண்டு கண்காணிக்கும் அளவிற்கு அதிநவீன முறையில் செயல்பாடுகள் அமைத்துள்ளனர்,

ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு சம்பந்தமான அனைத்து வாகனங்களும் தரம்பிரித்து குற்ற வழக்குகள், கடத்தல் சம்பந்தமான வழக்குகள், மண் கடத்தல் வாகனங்கள், விபத்து வாகனங்கள், என அனைத்தையும் வழக்குகள் தரம்பிரித்து சீராக நிற்க வைக்கப்பட்டுள்ளது,

காவல்நிலையத்தில் இதுபோல் வாகனங்களை நிறுத்தி வைப்பது பொதுமக்களுக்கு கண்கவர் வகையில் அமைந்துள்ளது, என்று கருத்து தெரிவித்துள்ளனர் பொதுமக்கள், ஏனென்றால் காவல் vநிலையங்கள் என்றாலே வழக்கு வாகனங்கள் குப்பை போல் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தது ஆனால் இந்த காவல் நிலையம் அதில் மாற்றும் முயற்சியை முன்னெடுத்துள்ளனர்..,,

காவல் நிலையம் என்றால் அனைவருக்கும் வருவதற்கு ஒரு அச்ச உணர்வு ஏற்படும் ஆனால் ஆர்.கே.பேட்டை காவல் நிலையம் இதில் இருந்து முற்றிலுமாக விளக்கு பெற்று காவல் நிலைய பகுதியில் வரவேற்பு அறை முதல் அனைத்தையும் சுத்தமாக சுகாதாரமாக வழக்கு சம்பந்தமாக வரும் பொதுமக்களுக்கு தண்ணீர் கொடுத்து உபசரிப்பது பொது மக்கள் காத்திருக்கும் அரைக்கு மின்விசிறிகள் அனைத்தும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பது மேலும் தூய்மையான முறையில் காவல் நிலைத்தில் ஆர்.கே. பேட்டை காவல் நிலையத்தை பராமரிப்பது பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்,

காவலர்களின் உபசரிப்பு மேலும் காவல் நிலையம் என்ற அச்ச உணர்வு இல்லாமல் பொதுமக்கள் தங்கள் குறைகளை கூறுவதற்கு ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் வருவதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்,

ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தை சுற்றி முழுமையான முறையில் பசுமையான முறையில் பராமரிப்பு செய்து தோட்டங்கள் அமைத்து சீரான முறையில் பூங்கா அமைத்து இந்த பூங்காவில் உள்ள பகுதிகளில் பல்வேறு மரங்களை நடவு செய்து அந்த மரங்களுக்கு இந்த மரங்கள் என்று பெயரிட்டு பொதுமக்கள் அறியும் வண்ணம் ஏற்பாடு செய்துள்ளனர்.

காவல் நிலையத்திற்கு வழக்கு சம்பந்தமாக வரும் பொதுமக்கள் காவல் நிலையத்தில் அமைத்துள்ள இந்த பூங்காவில் அமர்ந்து மனநிம்மதியை பெருமளவிற்கு இயற்கையான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளனர்.

ஆர்.கே.பேட்டை காவல்துறையினர் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர், மொத்தத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் தரச்சான்றிதழ் பெருமளவிற்கு இந்தக் காவல் நிலையம் அமைந்துள்ளது என்பது நேரில் கண்ட உண்மை மற்றும் மற்ற காவல்நிலையங்கள் விட இந்த காவல் நிலையத்தில் புதுமை நிறைந்துள்ளது என்று காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஏழுமலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் மருத்துவக் கல்லூரியில் 6 வது விளையாட்டு விழா

293 சிவகங்கை: சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் 6 வது விளையாட்டு விழா நடைபெற்றது. இதில் நமது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் திரு T. செந்தில் குமார் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452