திருச்சி மாவட்ட காவல்துறையின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Admin
திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.பா. மூர்த்தி. இ.கா.ப அவர்களின் உத்தரவின் பெயரில், திருச்சி மாவட்டத்தில் தொடரந்து பெய்துவரும் கனமழையை எதிர்கொள்ளும் வகையில் மாவட்டம் முழுவதும் காவல் அலுவலர்களும், ஆயுதப் படையினரும், ஊர்க்காவல் படையினரும் மீட்புப் பணிக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 60 பேர் பேரிடர் மீட்பு பயிற்சி எடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு மாவட்டத்தின் உட்கோட்ட தலைமையிடத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் நீச்சல் பயிற்சி பெற்ற 130 காவல்துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நீச்சல் சாதனங்கள், இரப்பர் படகுகள், உயர் மின் விளக்குகள், மின்சாரத்தில் இயங்கும் மரம் அறுக்கும் இயந்திரங்கள், முதலியவை வழங்கப்பட்டுள்ளது.
இன்று (09.11.2021) திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர். பா. மூர்த்தி.இ.கா.ப., அவர்கள் கம்பரசம்பேட்டையில் உள்ள தாழ்வான பகுதிகளை பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடினார். மேலும் முக்கொம்பு அணை பகுதியில் நீர் வரத்தினை பார்வையிட்டு காவல் அலுவலர்களுக்கு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
பொதுமக்கள் நீர் நிரம்பிய பகுதிகளுக்கு செல்லாமலும் மின்கம்பங்கள் மின்மாற்றி களுக்கு அருகில் செல்லாமலும் முன்னெச்சரிக்கையோடு இருந்து தங்களது மேலான உயிரினை பாதுகாத்துக்கொள்ள இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. நிஷாந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவலர் குடியிருப்பில் தேங்கியுள்ள நீரை அகற்றிய கீழ்ப்பாக்கம் காவல் துறையினர்

288 சென்னை : சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் மருத்துவர் திரு.N.கண்ணன், இ.கா.ப (தெற்கு) அவர்கள் மழைநீர் தேங்கியுள்ள கீழ்பாக்கம் காவலர் குடியிருப்புக்கு சென்று ஆய்வு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452