திருநெல்வேலியில் அரிவாளால், தாக்கிய நபர் கைது

admin1
திருநெல்வேலி :  நாங்குநேரி காவல் நிலைய, சரக எல்லைக்குட்பட்ட மஞ்சன்குளத்தைச் சேர்ந்த, முத்துராமலிங்கம் (60), என்பவர் (10.05.2022), -ம்‌ தேதி என்பவர் நாங்குநேரி 8-ம் மண்டகப்படி, அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு அதே பகுதியை சேர்ந்த வானுமாமலை(55),  என்பவரை அரிவாளால் தாக்கியுள்ளார், அப்போது ரோந்து பணியில் இருந்த காவலர் திரு.சுந்தரபாண்டி,  அவர்கள் தகவல் அறிந்து,  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளார்.  மேற்படி குற்றவாளி, காவலரை கண்டதும் தப்பிச் சென்றார்.
தப்பிச் செல்லும் போது,  காவலர் திரு. சுந்தரபாண்டி, அவர்கள் எதிரியை துரத்தி சென்று, மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தார்.  இதுகுறித்து வானுமாமலை, புகாரின் பேரில் எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட,  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மேற்படி சம்பவத்தை அறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப, அவர்கள் தகவல் அறிந்து உடனே, சம்பவ இடத்திற்கு சென்று எதிரியைத் துரத்தி பிடித்த காவலர் திரு.சுந்தரபாண்டி,  அவர்களை நேரில் அழைத்து பாராட்டி,  பரிசு வழங்கி வெகுமதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

வருமான வரி ஏய்ப்பு செய்த, பெண்ணுக்கு சிறை தண்டணை

526 கோவை:  கோவை அருகே உள்ளதெலுங்கு, பாளையத்தைச் சேர்ந்தவர் கவிதா (37),  இவர் சிறுவாணி மெயின் ரோட்டில் பெட்ரோல் பங்க், நடத்தி வருகிறார். கடந்த 2008 – […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452