திருநெல்வேலியில் கொடூரக் கொலை, இரண்டு பெண்கள் கைது

admin1

திருநெல்வேலி :  பேட்டையில் இருந்து பழையபேட்டை,  செல்லும் ஆதம்நகரில் மே 3 பகலில் ஒரு ஆட்டோவில் வந்த நபர்கள், ஒரு பெண்ணை இறக்கி சாலையோர,  குப்பைக்கு நடுவில் வீசினர்.பழைய துணிகளை அவர் மீது போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பினர். அவர் எரிந்து கரிக்கட்டையானார்.  இதுகுறித்து பேட்டை காவல் துறையினர்,  விசாரித்தனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை,  வைத்து ஆராய்ந்த போது, கொல்லப்பட்டது மூதாட்டி என்பதும், அவரை கொன்றது இரு பெண்கள்,  என்பதும் தெரிந்தது. ஆட்டோ டிரைவரை பிடித்து காவல் துறையினர்,  விசாரித்தனர். அவர் சம்பவ இடத்தில் மூன்று பேரை,  இறக்கி விட்டதை,  ஒப்புக் கொண்டார். அதன் பின், மூதாட்டியை கொன்ற இரு பேத்திகளை காவல் துறையினர்,  கைது செய்தனர்.

காவல் துறையினர்,  கூறியதாவது  பேட்டை கிருஷ்ணபேரியைச்,  சேர்ந்தவர் சுப்பம்மாள், (90),  வயோதிக்கத்தால் பாதிக்கப்பட்ட இவரை, மகள் வழி பேத்திகள்,  கவனித்து வந்தனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சுப்பம்மாளை, மருத்துவர்கள்,  வீட்டுக்கு துாக்கிச் செல்லும்படி கூறினர்.  அதன்படி, அவரை இரு நாட்களுக்கு முன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.  உயிருக்கு போராடிய அவரை, பேத்திகள் ஒரு ஆட்டோவில் அழைத்துச் சென்று, பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். பேத்திகள் தன் மீது பெட்ரோல் ஊற்றும் போது, ‘என்னை கொல்லப் போகிறீர்களா?’ என, அந்த மூதாட்டி பரிதாபமாக,  கேட்டுள்ளார். வயோதிகம் காரணமாக,  சத்தம் போடாமல் தீக்கு  இரையானார். இவ்வாறு  காவல் துறையினர், தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

ரயிலில், கொள்ளையடிக்க முயன்ற, நகைகள் ஆய்வு

571 வேலூர் :  கோவை காந்தி பார்கை சேர்ந்த,  நகை பட்டறை உரிமையாளர் ரகுராம், (44), சென்னையில் உள்ள சில நகை கடைகளுக்கு,  ஆர்டரின் பேரில், 2 […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452