திருவள்ளூர் அருகே வயதான தம்பதியினர் அரளி விதை அரைத்து குடித்து உயிரிழந்த சோகம்

Prakash

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயராம் 75. மற்றும் இவரது மனைவி ராஜம்மாள் 70. தம்பதியினர் இவர்களுக்கு இரண்டு பெண்களும் ஒரு ஆண்மகனும் உள்ளனர்

பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து அவர்கள் தனித்தனியே வசித்து வரும் நிலையில் இந்த வயதான தம்பதியினர் தனியாக வசித்துவந்து உள்ளனர்

இந்த வயதான தம்பதியினர் இன்று தனது வீட்டில் அரளி விதையை அரைத்துக் குடித்து உயிரிழந்துள்ளனர்

முன்னதாக சென்னையில் வசித்து வரும் தனது மகனான பிரகாஷ்க்கு தாயார் ராஜம்மாள் தொடர்பு கொண்டு தன் கணவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தாலும் எங்களால் உங்களுக்கு செலவுகளும் நிம்மதியையும் இழந்து வருவது எங்களுக்கு மன வருத்தம் அளிக்கிறது நாங்கள் இருவரும் அரளி விதையை அரைத்து குடித்து விடும் என கூறியுள்ளார்

இதனைக் கேட்ட மகன் பிரகாஷ் அதிர்ச்சி அடைந்து தாய் தந்தை வசிக்கும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தந்தை உயிரிழந்த நிலையிலும் தாயார் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளனர்

உடனடியாக இருவரையும் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளார் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்

தகவலறிந்து வந்த பொன்னேரி போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

வயதான காலத்தில் தன் பிள்ளைகளுக்கு தொல்லை தரக் கூடாது என்ற எண்ணத்தில் தனது காதலையும் மெய்ப்பிக்கும் வகையில் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருவள்ளுர் இருந்து குடியுரிமை நிருபர்

V.கோபி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களையும் நேரில் சந்தித்து கலந்தாய்வு கூட்டத்தினை நடத்தினார்கள்.

288 பெரம்பலூர்:  காவல்துறையினர் போன்று பொது மக்களிடம் அதிகம் தொடர்பு கொண்டுள்ளது ஓட்டுநர்களான தாங்கள் தான் எனவும் தங்களது ஆதரவும் ஒத்துழைப்பும் மாவட்ட காவல்துறைக்கு எப்போதும் வேண்டும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!