தி.மு.க.வினர் மீது, பா.ஜ. க,வினர் புகார்

admin1

சென்னை :  நியாய விலைக் கடையில் இருந்த,  பிரதமர் நரேந்திர மோடியின்,  படத்தை அகற்றி, சேதப்படுத்தியதாக, தி.மு.க.,வினர் மீது, பா.ஜ.,வினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். சென்னை, நன்மங்கலத்தில்,  உள்ள நியாயவிலைக் கடை ஒன்றில், முன்னாள், இந்நாள் முதல்வர் படம்,  இருப்பதை பார்த்த பா.ஜ., பிரமுகர் ஒருவர், பிரதமர் நரேந்திர மோடியின்,  படத்தை மாட்டினார்.

இதை அறிந்த தி.மு.க.,வினர், நியாய விலைக் கடையில்,  இருந்த பிரதமர் மோடியின் படத்தை கழட்டி, சேதப்படுத்தி வீசினர்.  மேலும், அங்கு சென்ற பா.ஜ.,வினரையும், பெண் நிர்வாகிகளையும் அவமானப்படுத்தும் வகையில்,  பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து, பா.ஜ., வைச் சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பள்ளிக்கரணை காவல் துறையினர், விசாரித்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

மதுரை விமான நிலையத்தில், தங்கம் பறிமுதல்

580 மதுரை :  துபாயிலிருந்து நேற்று மதுரைக்கு வந்த,  ‘ஸ்பைஸ்ஜெட்’ விமானத்தில்,  பயணி ஒருவர், தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினருக்கு,  தகவல் வந்தது.  அதில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452