தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கு ரூ 16.32 கோடியில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட 10 புதிய அறிவிப்புகள்

Admin

சென்னை : தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கென ரூ 15 கோடியே 81 லட்சம் மதிப்பீட்டில் 10 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

இது குறித்து சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் அனைத்து நிலையங்களிலும் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ள நீர்தாங்கி வண்டிகளுக்கு மாற்றாக புதிய ஊர்திகள் வழங்கும் திட்டத்தின் மூன்றாவது கட்டமாக ரூ 4  கோடியே 95 லட்சம் செலவில் 15 புதிய நீர்தாங்கி வண்டிகள் வாங்கப்படும்.

மாவட்ட தலைநகரங்களிலும், முக்கிய நகரங்களிலும் சிறிய நுரை கலவை தகர்வுஊர்திகள் வழங்கும் திட்டத்தின், மூன்றாவதுகட்டமாக சென்னையில் கோயம்பேடு; திருவள்ளூர் மாவட்டத்தில்கும்மிடிப்பூண்டி சிப்காட், கடலூர் மாவட்டத்தில் கடலூர் சிப்காட், ஈரோடுமாவட்டத்தில் ஈரோடு மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை ஆகிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கு ரூ 2 கோடி செலவில் 5 சிறிய நுரை கலவை தகர்வு ஊர்திகள் வழங்கப்படும்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கு படிப்படியாக சொந்தக் கட்டடங்கள் கட்டித் தரப்பட வேண்டும் என்ற அடிப்படையில் சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை மற்றும் தியாகராய நகர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கு ரூ 2 கோடியே 24 லட்சம் செலவில் சொந்தக் கட்டடங்கள் கட்டித் தரப்படும். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் உள்ள உதவி மாவட்ட அலுவலர்கள் தங்கள் பணிகளை செவ்வனே மேற்கொள்ள ஏதுவாக மொத்த முள்ள 46 உதவி மாவட்ட அலுவலர்களுக்கும் ஜீப்புகள் வழங்கும் திட்டத்தின் இரண்டாவது கட்டமாக, 10 உதவி மாவட்ட அலுவலர்களுக்கு ரூ 60 லட்சம் செலவில் 10 ஜீப்புகள் வாங்கப்படும்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் அனைத்து நிலை அலுவலர்களும், தங்கள் பணிகளை செவ்வனே மேற்கொள்ளும் பொருட்டு அவர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தின் இரண்டாவது கட்டமாக, 50 நிலைய அலுவலர்களுக்கு ரூ 35 லட்சம் செலவில் 50 மோட்டார் சைக்கிள்கள் வாங்கப்படும். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் பயன்பாட்டில் உள்ள புகைப்படப் பிரிவை மேம்படுத்தும் விதமாக நவீன புகைப்பட கருவி மற்றும் வீடியோ சாதனங்கள்ரூ 4 லட்சத்து 56 ஆயிரம் செலவினத்தில் வாங்கப்படும்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 அன்று தீத்தொண்டு நாள் அனுசரிக்க ஏதுவாக, இம்மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கும் 500/- ரூபாய் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகை 3,000/- ரூபாயாக உயர்த்தப்படும். இதனால், அரசுக்கு ஆண்டொன்றுக்கு 8 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். அனைத்து தீயணைப்பு வீரர்களுக்கும், தீயிலிருந்து பாதுகாக்கும் தற்காப்பு உடைகள் வழங்கும் திட்டத்தின் மூன்றாவது கட்டமாக, 5 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் 1,000 “தற்காப்பு உடைகள்” அதற்குரிய தீ பாதிக்காத காலணிகள் மற்றும்தலைகவசங்கள் ஆகியவற்றுடன் வாங்கப்படும்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் பயன்பாட்டிலுள்ள வான்நோக்கி நகரும் ஏணி கொண்ட  ஊர்திகளை இயக்கும்பணியாளர்களுக்கு, அவர்களின்  வேலைத்திறனை கருத்திற்கொண்டுமாதமொன்றிற்கு 1,000/- ரூபாய் சிறப்பு படியாக வழங்கப்படும். இதனால்,அரசுக்கு ஆண்டொன்றுக்கு 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் உள்ள இசைமேள குழுவிற்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் 1,200/- ரூபாய் மானியம் 50,000/-ரூபாயாக உயர்த்தப்படும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

தமிழகத்தில் சட்டம் ஓழுங்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சட்ட சபையில் முதலமைச்சர் உரை

75 சென்னை : கடந்த 2006 முதல் 2011 வரையிலான தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க ஆட்சியில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452