தேசிய காவலர் தினத்தை முன்னிட்டு காவலர்களுக்கு இலவச மருத்துவ மற்றும் கண் சிகிச்சை முகாம்

Admin

தேசிய காவலர்கள் தினத்தை முன்னிட்டு, நியூஸ் மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக மாபெரும் இலவச மருத்துவ முகாம் கடந்த 26 12 2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை லோன்ஸ்கோயர் கொத்தவால்சாவடியில் நடைபெற்றது. இம்முகாமினை சென்னை பெருநகர போக்குவரத்து துணை ஆணையர்(வடக்கு) டாக்டர். பிரதீப், ஐபிஎஸ் அவர்கள் துவக்கி வைத்தார்

. இந்த இலவச மருத்துவ முகாமில் சர்க்கரை அளவு சரிபார்த்தல், ரத்த அழுத்தம், கல்லீரல் பரிசோதனை, மற்றும் கண் பரிசோதனை உள்ளிட்ட தேவைகளுக்காக பொதுமக்கள் சிகிச்சை மேற்கொண்டனர். மேலும் போக்குவரத்து காவலர்கள் மன அழுத்தத்தை போக்க பிசியோதெரபி நிபுணர்கள் மூலம் ஆலோசனை மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அனேக பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்ச்சி ஆர் பி எஸ் மருத்துவமனை, சென்னை லிவர் பவுண்டேஷன் மற்றும் எழில் டயபெட்டிக் சென்டர் பங்கு கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து உரிய ஆலோசனை வழங்கினர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவரும், போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியரும், தேசிய காவலர் தினம் நிறுவனருமான திரு.அ. சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு மாநில தலைவர் (வர்த்தகர்கள் பிரிவு) திரு. சாகித் உசேன் இம்முகாமிற்கான ஏற்பாட்டினை சிறப்பாக செய்திருந்தார்.

தமிழ்நாடு மாநில தலைவர் (வர்த்தகர்கள் பிரிவு) திரு. சாகித் உசேன் அவர்கள் கடந்த சில வருடங்களாக காவலர் தினத்தை சிறப்பாக சென்னை முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டியும் காவல்துறையினருக்கு இனிப்புகள் வழங்கியும் நியூஸ் மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா சங்கத்துடன் இணைந்து காவலர்கள் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டாக்டர். பிரதீப் ஐபிஎஸ் அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு போக்குவரத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார் சாலைகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் கொரானா ஊரடங்கு காலத்தில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து தெளிவாக விளக்கி கூறினார். மேலும் விதிமுறையகள் துண்டு பிரசுரங்கள் அளித்தார். இந்நிகழ்ச்சியில் அனேக ஆட்டோ ஓட்டுநர்கள், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து காவல் துறையினர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.


Leave a Reply

Your email address will not be published.

Next Post

ரவுடிக்கு 214 நாட்கள் சிறை

840 காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452