நகை மற்றும் பணத்தை பறித்துச் சென்ற நபர் கைது

Admin
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட பழவூர், ஆவாரைகுளத்தைச் சேர்ந்த பொன்னம்மாள் (70),என்பவர் 17.12.2021அன்று திசையன்விளை அருகே உள்ள மலையடிபுதூரில் உள்ள அவரது குடும்ப கோவிலுக்கு சாமி கும்பிட வள்ளியூரில் இருந்து பேருந்து மூலம் மன்னார்புரம் வந்துள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த நபர் (பார்த்தால் அடையாளம் காட்ட கூடிய நபர்) ஒருவர் அப்பெண்ணிடம் எங்கே செல்லவேண்டும் என்று கேட்டுள்ளார். அப்பெண்ணும் மலையடிபுதூரில் உள்ள கோவிலுக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணை நிறுத்தி பொன்னமாளை ஏற்றி விட்டு மலையடிபுதூரில் இறக்கி விடுமாறு கூறினார். மேற்படி அப்பெண் பொன்னம்மாளை பட்டரைகட்டிவிளையில் இறக்கி விட்டு சென்றுள்ளார். மீண்டும் அதே வழியாக வந்த நபர் பொன்னமாளை தனது இரு சக்கர வாகனத்தில் ஏறுங்கள் நான் கோவிலில் விடுகிறேன் என்று கூறியுள்ளார். பொன்னம்மாள் இருசக்கர வாகனத்தில் ஏறி சென்று கொண்டிருக்கும் போது திருவடனேரி அருகே அந்நபர் இருசக்கர வாகனத்தை நிறுத்தி பொன்னம்மாள் அணிந்திருந்த 8 பவுன் மதிப்பிலான தங்க செயினையும் அவரது பர்சை பறித்து அதில் இருந்த 1200 ரூபாய் பணத்தை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து பொன்னம்மாள் விஜயநாராயணம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், நாங்குனேரி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.ராஜாத் சதுர்வேதி இ.கா.ப.,அவர்கள் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் பொன்னம்மாளிடம் நகை பறிப்பில் ஈடுபட்டது திருவிடைநேரியை சேர்ந்த துரை என்பவரின் மகன் சங்கர் ராஜா(30) என்பது தெரியவந்தது. மேற்படி தனிப்படை காவல்துறையினர் எதிரியை இன்று கைது செய்து அவரிடமிருந்து 8 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர்.
செயின் பறிப்பில் ஈடுபட்ட எதிரியை உடனடியாக கைது செய்த தனிப்படை காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன், இ.கா.ப அவர்கள், அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

எவ்வித சர்ச்சையிலும் சிக்காத மதுரை போலீஸ் அதிகாரிகளுக்கு விருது

855 மதுரை : எந்தவித சர்ச்சையிலும் சிக்காத ,மதுரை போலீஸ் அதிகாரிகளுக்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித சர்ச்சையிலும் சிக்காமல், சிறப்பாக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452