நாமக்கலில் ரூ.4,500 லஞ்சம் வாங்கிய இளநிலை பெண் உதவியாளர் கைது

Admin

நாமக்கல்:  நாமக்கலில் இறப்பு சான்று நகல் அளிக்க லஞ்சம் கேட்ட சார் – பதிவாளர் அலுவலக இளநிலை பெண் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்தவர் ராதா 40. இவர் தன் பாட்டியான நாமக்கல் மாவட்டம் மோகனுார் அடுத்த ஆண்டாபுரத்தை சேர்ந்த தங்கம்மாளின் இறப்பு சான்றிதழ் நகல் கேட்டு மோகனுார் சார் — பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

இது தொடர்பாக அலுவலக இளநிலை உதவியாளர் காந்திமதி 29யை சந்தித்துள்ளார். அவர் ‘1995ம் ஆண்டு சான்றிதழ் என்பதால் தேடி பார்ப்பது சிரமம். அதனால் 5000 ரூபாய் தந்தால் தேடி எடுத்துத் தருகிறேன்’ எனக் கூறினார். பிறகு 4500 ரூபாய் இறுதி செய்யப்பட்டது.

இது குறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் ராதா புகார் தெரிவித்தார். அவர்கள் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய 4500 ரூபாய் நோட்டுகளை நேற்று முன்தினம் மாலை 6:30 மணிக்கு அலுவலகத்தில் காந்திமதியிடம் வழங்கினார். மறைந்திருந்த காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஜெயகுமார் தலைமையிலான காவல்துறையினர் காந்திமதியை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

சமூக வலைதளத்தில் தவறான தகவல்: 2 பேர் தற்கொலை

38 கடலூர்: கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே மாணவி உட்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளத்தில் தவறான தகவலை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452