நோயாளிகளுக்கான உபசரிப்பு குறித்து எஸ்.பி. அறிவுறுத்தல்!

Admin

காரைக்கால்: காரைக் கோயில்பத்தில் இயங்கி வரும் அன்னை தெரசா பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி சுகாதார நிலையத்தில்,சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு, புதுச்சேரி அன்னை தெரசா படமேற்படிப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை செவிலியர் அதிகாரி டாக்டர் பிரமிளா தமிவாணன் தலைமை வகித்தார். மாவட்ட எஸ்.எஸ்.பி சந்திரன் குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை துவக்கி வைத்து பேசியதாவது:

“இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் ஏராளமான வேலை பளு உள்ளது. குறிப்பாக, செவிலியர்களுக்கு மருத்துவமனையில் பலவித வேலைகள், டென்சன் இருக்கும். அதையெல்லாம் பெரிதுபடுத்தாது, உங்கள் தலைமை செவிலியர் அதிகாரி டாக்டர் பிரமிளா தமிவாணன் கூறியது போல், நோயாளிடம் பாசமுடன் பழகி கனிவான முறையில் உபசரிக்கவேண்டும். உபசரிப்புதான் அவர்களுக்கு முக்கியம். பிறகுதான் சிகிச்சை எல்லாம். பலருக்கு உங்கள் உபசரிப்பே மிகப்பெரிய மருந்தாக இருக்கும். அதேபோல், நோயாளிகளை மருத்துவமனையில் விட்டுவிட்டு வெளியில் என்ன ஆனதோ என தவியாய் தவிக்கும் உறவினர்களுக்கும் நல்ல பதிலை அவ்வப்போது கூறவேண்டும். அவர்களையும் அரவணைத்து செல்லவேண்டும்” என்றார்.

முன்னதாக, கல்லூரியின் பொறுப்பு முதல்வர் தாட்சாயினி அனைவரையும் வரவேற்றார். கருத்தரங்கில், கல்லூரி மாணவ, மாணவிகள், விரிவுரையாளர்கள், அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கடலூரில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

56 கடலூர்: கடலூர் போக்குவரத்து காவல் நிலையம் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி டவுன்ஹாலில் நடந்தது. பேரணியை கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.நரசிம்மன் தலைமை தாங்கி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452