பதக்கங்களை வென்று வந்த திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்

Admin

திருநெல்வேலி : தமிழ்நாடு காவல் துறையினருக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டி கோவை மாவட்டம் நேரு விளையாட்டு அரங்கில் 15.12.2021 முதல் 17.12.2021 வரை நடைபெற்றது. இப்போட்டியில் தென் மண்டலம் சார்பாக திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர். இதில் திருநெல்வேலி மாவட்டம் உவரி காவல் ஆய்வாளர் திருமதி.செல்வி அவர்கள், 100மீட்டர் ஓட்டத்தில் வெண்கல பதக்கம் மற்றும் நீளம் தாண்டுதலில் வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார். இதேபோல் சுத்தமல்லி காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் காவலர் முத்துசெல்வி, அவர்கள் 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கல பதக்கமும் வென்றுள்ளார். நாங்குநேரி காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் காவலர் நிஷா அவர்கள் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும் 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். ஏர்வாடி காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் காவலர் ஜெயசுகி அவர்கள் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கலம் பதக்கம் வென்றுள்ளார். பதக்கம் வென்று திருநெல்வேலி மாவட்ட காவல் துறைக்குப் பெருமை சேர்த்த காவல் ஆய்வாளர் திருமதி.செல்வி அவர்களையும் பெண் காவலர்களையும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப அவர்கள், வெகுவாக பாராட்டினார்.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ராணிப்பேட்டையில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு காசோலை

897 இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். தீபா சத்யன் இ. கா. ப., அவர்கள் பணியின்போது கோவிட்-19 காரணமாக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452