பதவி ஏற்ற 20 நாட்களில், நெல்லை மக்களின் மனதை கவர்ந்த காவல் துணை ஆணையர் திரு.சரவணன்

Admin

நெல்லை: பதவி ஏற்ற இருபது நாட்களில், நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்குக்கில் சிறப்பாக செயல்பட்டது, போக்குவரத்தை மாற்றங்களை புகுத்தியது, போதை தடுப்பு நடவடிக்கையாக குற்றவாளிகள் கைது, விபத்துக்களை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளால் நெல்லை மக்களின் மனதை கவர்ந்துள்ளார் காவல் துணை ஆணையர் திரு.சரவணன்.

கடந்த செவ்வாய் கிழமையன்று நடைபெற்ற நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் எந்த தடயமும், துப்பும் கிடைக்காத பொழுதும் நெல்லை மாநகர காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு குறுகிய சில நாட்களில் குற்றவாளியை கைது செய்தது, அனைவரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளது.

நெல்லை துணை ஆணையர் திரு. சரவணன் தலைமையிலான காவல்துறையினர் இந்த குற்றவழக்கை விசாரித்தனர். இவர் கடந்த ஜீலை 10 ஆம் தேதி தான் சென்னையிலிருந்து நெல்லைக்கு துணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

நெல்லை மாநகரில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூன்று பேர் படுகொலை வழக்கில்
குற்றத்தை கண்டுபிடிக்க பல்வேறு ஆலோசனைகளையும் தகவல்களையும் வழங்கிய உயரதிகாரகள், நண்பர்கள், பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நெல்லை துணை ஆணையராக பதவி ஏற்ற இருபது நாட்களில் நெல்லை மக்களின் மனதை கவர்ந்துள்ளார். பதவியேற்றவுடன் நெல்லையில் நடக்கும் போக்குவரத்து விதிமீறல் குறித்து எச்சரிக்கை விடுத்தார். திருநெல்வேலி மாநகரில் நடைபெறும் சாலை விபத்துகளை குறைக்கும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக கடந்த இரண்டு நாட்களில் 941 ஹெல்மெட் வழக்குகள் மற்றும் 33 ஓவர் ஸ்பீடு வழக்குகள் உட்பட 1172 மோட்டார் வாகன வழக்குகளை பதிவு செய்யப்பட்டுள்ளது.

நகரத்தின் சில குறிப்பிட்ட இடங்களில் ஒரு சில இளைஞர்கள் மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் மற்றும் பொதுமக்களுக்கு தொல்லை தரும் வகையிலும் பைக் பந்தயங்களில் ஈடுபடுவதாக தெரிகிறது. அவ்வாறு எவரேனும் ஈடுபட்டால் மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

திருநெல்வேலி அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோவிலின் 515ம் ஆண்டு ஆனித்தேரோட்டத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகர காவல்துறையின் சார்பாக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முன்னின்று மேற்கொண்டு எந்த வித அசம்பாவிதம் நடைபெறாமல் விழா சிறப்பாக நடைபெற பணியாற்றினார்.

ஆனித்தேரோட்டத்தில் முதன்முறையாக, 15க்கும் மேற்பட்ட டிரோன்கள் (Drone ) மூலம் கண்காணிப்பு, நான்கு மாட வீதிகளிலம் 50 CCTV கண்காணிப்பு கேமிராக்கள், 8 இடங்களில் உயர்மட்ட கோபுர கண்காணிப்பு, குழந்தைகள் காணமல் போவதை தடுக்க குழந்தைகளின் கைகளில் பெற்றோரின் செல்போன் எண் எழுதிய Tag கட்டுதல், 10 இடங்களில் காவல் உதவி மையங்கள் , செயின்பறிப்பை தடுக்க சேப்டி பின்கள், உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனித்தேரோட்டத்தை குறித்து துணை ஆணையர் திரு.சரவணன் கூறியதாவது, லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என கூறியபோது, எப்படி பாதுகாப்பு பணியை மேற்கொள்ளப்போகிறோம் என்று மலைத்துப் போனது உண்மையே.

மாநகர காவல் ஆணையரின் வழிகாட்டுதலின் பேரில் கடந்த வருடங்களில் மாவட்ட ஆட்சியர். பணியாற்றிய உயர்அதிகாரிகள் மற்றும் காவலர்களை தொடர்பு கொண்டும் தற்போது பணியாற்றி வரும் அலுவலர்களின் ஆலோசனை பெறப்பட்டது.

மிகவும் முக்கியமாக நெல்லை வாழ் பொதுமக்களிடமும், முகநூல் நண்பர்களிடமும் பத்திரிகை நணபர்களிடமும் பெற்ற ஆலோசனைகள் மிகுந்த பயனளிப்பதாக இருந்தது. லட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்ற ஆனித்திருவிழா குற்றச்சம்பவங்கள் நிகழாவண்ணம் மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் நடந்தேறியுள்ளது.

முறையான திட்டமிடல், சிசிடிவி கேமிராக்கள், CCTV கேமிராக்கள், வாட்ச் டவர், குழந்தைகளுக்கான வுயுபு, சேப்டி பின்கள் போன்றவை பாதுகாப்பு பணிக்கு வலு சேர்த்தது . பணி சிறப்பாக அமைய பணியாற்றிய அனைத்து காவலர்களுக்கும், பிற துறைகளை சார்ந்தவர்களுக்கும் நெல்லை பொதுமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

 

போக்குவரத்தில் ஒழுங்கு நடவடிக்கை
திருநெல்வேலி மாநகரில் ஒரு சில பேருந்து நிறுத்தங்களில் பள்ளி விடும் நேரங்களில் அரசுப் பேருந்துகள் நிற்பதில்லை அல்லது பேருந்து நிறுத்தங்களில் இருந்து தள்ளி நிறுத்துகிறார்கள், மற்றும் மாணவர்கள் பேருந்தில் ஏறுவதற்கு முன்பாகவே எடுத்து விடுகிறார்கள் போன்ற பிரட்சனைகள் அதனை சரிசெய்ய சில. முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

நெல்லை மாநகர காவல்துறை சார்பாக நெல்லை காவல் துணை ஆணையர் உத்தரவின்படி, மாநகரில் விரைவான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து மேற்கொள்ள ஏதுவாக ஒரு புதிய முயற்சியாக மாநகரில் SN ஹை ரோடில் “Bus Bay” அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏற்படும் நன்மைகள், பேருந்துகள் அனைத்தும் அதற்கான பேருந்து நிறுத்தத்தில் நிற்கும், பேருந்துகள் சாலையின் மத்தியில் நின்று பயணிகளை ஏற்றும் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும், பேருந்துகள் நிறுத்ததிற்கு பேருந்து வரும் என்பதால் பயணிகள் நிழற்குடையில் நின்று வெயிலை சமாளிக்கலாம்.

இரவு நேரங்களிலும் சாலையில் போடப்பட்டுள்ள தடுப்புகள் தெரியும் வண்ணம் ஒளிரும் பட்டைகள் ( Reflective Stickers) ஓட்டப்பட்டுள்ளது, புதிய முயற்சியின் துவக்கமாக நெல்லையப்பர் சாலையில் பேருந்து நிறுத்தத்தில் “Bus Bay” துவக்கப்பட்டுள்ளது, நெல்லை மாநகர பொதுமக்களின் வரவேற்பை பொறுத்து பிற இடங்களிலும் இவ்வசதி மேற்கொள்ளப் படும்.

நெல்லை மாநகர காவல்துறையின் புதிய முயற்சிக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். மக்கள் ஆதரவின்றி எத்திட்டமும் வெற்றி பெற இயலாது. திட்டத்தை உடனடியாக அமல்படுத்த முன்வந்த டவுன் உதவி ஆணையர் சதீஸ் குமார், போக்குவரத்து ஆய்வாளர் சந்தானகுமார் ஒத்துழைப்பு நல்கிய போக்குவரத்து கழக அலுவலர்கள் ஆகியோரை பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் விபத்துகளை எவ்வாறு குறைப்பது, மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக்குவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்ட சாலை போக்குவரத்து விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில், அனைத்துதுறை அலுவலர்களின் உடனடி கவனத்தை பெற ஏதுவாக ‘விபத்தில்லா நெல்லை’என்ற வாட்ஸ்அப் குழுவை உருவாக்குதல், நெல்லையில் அடிக்கடி விபத்துகள் நடக்கும் பகுதிகளை கண்டறிந்து விபத்து தவிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளுதல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், வாகன உரிமம் பெறாமல் வண்டி ஓட்டும் மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல், விழிப்புணர்வு , அமலாக்கம், பொறியியல் ஆகிய (  Traffic Education, Traffic Enforcement, Traffic Engineering) அனைத்திலும் கவனம் செலுத்துதல், சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை ஒரு சமூக இயக்கமாக மாற்றுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

திருநெல்வேலி மாநகரில் விபத்துகளை குறைக்கவும் சாலை போக்குவரத்தினை சீராக்குவும் பல தொடர்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் . இதில் பெரும்பங்கு வகிப்பவர்கள் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் ஆவர். எனவே அவர்களை அவர்களது பணிமனையில் சந்தித்து நெல்லை மாநகர காவல் ஆணையர் அறிவுரைப்படி காவல்துறை எடுத்துவரும் முயற்சிகள் குறித்து விளக்கி ஒத்துழைப்பு கோரினார்.

போதைதடுப்பு வழக்குகளில் இரும்பு கரம்
திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நெல்லை காவல் துணை ஆணையர் திரு.சரவணன் அவர்களுக்கு தகவல் கிடைக்கவே உடனடியாக நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் 12 கடைகளில் தடைசெய்யப்பட்ட 1500 போதை ஏற்படுத்தும் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு அவர்கள் 12 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இளைய தலைமுறையின் போதை பழக்கம் நம் சமூகத்தை பின்னோக்கி இட்டுச் செல்லும். அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடத் தூண்டும். தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்கள் குறித்து தகவல் திரட்டப்பட்டு கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் தெரிவிக்க விரும்புவோர் மாநகர கட்டுப்பாட்டு அறை எண் 0462 2562651 அல்லது எனது முகநூல் மெசஞ்சரிலோ தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் சிறு மீன்களே. திமிங்கல வேட்டைக்கு காத்திருப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

மரம் நடுவிழா
திருநெல்வேலி மாநகர காவலர்களின் மன அழுத்தத்தை போக்க,“நிறைவாழ்வு பயிற்சி முகாம்” தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றது. இதன் தொடர்ச்சியாக நெல்லையில் காவலர்களுக்காக நிறைவாழ்வு பயிற்சிக்காக புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தை மாநகர காவல் ஆணையாளர் திரு.பாஸ்கரன் IPS அவர்கள் திறந்து வைத்தார். இதில் துணை ஆணையாளர் திரு.சரவணன் குத்துவிளக்கு ஏற்றி பயிற்சியை இனிதே தொடங்கி வைத்தார்கள்.

மூன்று நாட்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமில் காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு, பயனடைவர். நிறைவாழ்வு பயிற்சி குறித்தும் , இப்பயிற்சியை எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது என்பது குறித்தும் உரையாற்றினார்.

நிகழ்ச்சியை முன்னிட்டு நெல்லை ஆணையர் அவர்களும், துணை ஆணையாளர் திரு.சரவணன் அவர்களும் மரக்கன்றுகளை நட்டார்கள்.

நெல்லை பொருட்காட்சி திடலில் காவல்துறை அரங்கு

நெல்லை பொருட்காட்சி திடலில் உள்ள காவல்துறைக்கு என்று ஜீலை 20 ஆம் தேதி அரங்கு அமைக்கப்பட்டது. இதில் நெல்லை காவல் துணை ஆணையர் திரு. சரவணன் கலந்து கொண்டு காவல்துறை அரங்கை துவக்கி வைத்தார். இவ்வரங்கில் சிசிடிவி மற்றும் குற்றத்தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் துப்பறியும் மோப்ப நாய்களின் செயல் விளக்கத்தையும் துவக்கி வைத்தார்.

இக்காவல்துறை அரங்கில், தமிழக காவல்துறையின் செயல்பாடுகள், காவல்துறையில் சேர தேவையான கல்வித்தகுதி மற்றும் வயதுவரம்பு விபரங்கள், சிசிடிவி பயன்பாடு குறித்த செயல்விளக்கம், காவல்துறையின் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான செயலிகளை  இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளுதல், காவல்துறையில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் மற்றும் நவீன தகவல் தொடர்பு சாதனங்களை அறிந்து கொள்ளுதல் உள்ளிட்டவைகள் இடம் பெற்றன.

காவல்துறை அரங்கில் கலந்து கொண்ட பள்ளி சிறுவர்கள் அவர்கள் பகுதியில் கண்டுகொண்ட பள்ளிச்சிறுவர்கள் அவர்கள் பள்ளி வாசலில் பேருந்து ஒதுக்கம்  அமைத்து கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

மதுரையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது 

259 மதுரை: மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் உத்தரவுப்படி இன்று (31.07.2019) D1-தல்லாகுளம் (ச&ஒ) காவல்நிலைய சார்பு ஆய்வாளர்கள் திரு.நேரு, திரு.செல்வகுமார், திருமதி.அமுதவள்ளி ஆகியோர்கள் […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452