பாதுகாப்பு குறித்து 4 மாநில DGP -க்கள் கலந்தாய்வு

Admin

சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் வேகம் எடுத்துள்ளன.மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றி வரும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

லோக்சபா தேர்தல் பாதுகாப்பு குறித்து நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று காலை 11:00 மணிக்கு தமிழகம், கேரளா உள்ளிட்ட தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி  மாநில காவல்துறை இயக்குநர்கள், மதுவிலக்கு மற்றும் ஆயத்துறை ஆணையர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம்  நடத்தினர். தேர்தல் பாதுகாப்பு பணியில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து மாநில காவல்துறை இயக்குநர்கள்  தலைமையில் ஆலோசனை நடத்தினர்.

மாநிலங்களுக்கு இடையேயான போதை வஸ்துகள் கடத்தலைத் தடுத்தல், எல்லையோர சோதனைச்சாவடிகளை பலப்படுத்துதல், நிலுவையில் உள்ள பிடியாணைகளை நிறைவேற்ற சிறப்பு முயற்சி எடுத்தல், ஆயதங்கள் மற்றும் வெடிபொருட்கள் புழக்கத்தை தீவிரமாக கண்காணித்தல், சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணித்தல், தேர்தல் காலங்களில் மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு அளித்தல் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

'காவலர் அங்காடி' செயலி, டி.ஜிபி.ராஜேந்திரன் அறிமுகப்படுத்தினார்

22 தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைகளை சேர்ந்த பணிபுரியும் மற்றும் ஓய்வுபெற்ற அலுவலர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் வனத்துறையில் பணிபுரியும் சீருடை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452