பிரபல ரவுடி வெட்டி கொலை, எஸ். பி நேரில் விசாரணை

Admin

 திருவள்ளூர் :   பொன்னேரி வேண்பாக்கம்,  பள்ளம் பகுதியில் ஜவஹர், என்ற பிரபல ரவுடி வெட்டி கொலை ,செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கொலை செய்யப்பட்ட ஜவஹர் மீது 2 கொலை வழக்குகள், கஞ்சா வழக்கு, என பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு, முன் வீட்டில் கஞ்சா வைத்திருந்ததாகவும், நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததாகவும் ,கார்த்திக், என்பவர் கைது செய்யப்பட்ட  நிலையில், ஜவஹர் தலைமறைவானதாக, காவல் துறையினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு வேம்பாக்கம், பள்ளம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த ஜவகர், மற்றும் சிகன், இருவரை கத்தியால் குத்தியும், வெட்டியும் மர்ம நபர்கள் தப்பி சென்றனர். இதில் சம்பவ இடத்தில் ஜவகர் பலியானார். கை கால்கள் வெட்டப்பட்ட நிலையில், சிகன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த பொன்னேரி, காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து விசாரணை செய்தனர்.

இதனிடையே கொலை செய்யப்பட்ட,  இடத்திற்கு திருவள்ளூர் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் திரு. வருண்குமார், டி.எஸ். பி திருமதி. சாரதி, ஆய்வாளர் திரு. மார்ட்டின் பிரேம்ராஜ், நேரில் சென்று விசாரணை நடத்தினர். முன் விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளதாக, முதற்கட்ட விசாரணையில தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து ஜவஹரின், சடலத்தை மீட்ட காவல் துறையினர், உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு, அனுப்பி வைத்து கொலை செய்த, 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

நமது குடியுரிமை நிருபர்கள்

திரு. J. மில்டன்

மற்றும்

திரு. J. தினகரன்

நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா

திருவள்ளூர்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

மாணவி தற்கொலை, காட்டுர் காவல் துறையினர் விசாரணை

619  திருவள்ளூர் :  பொன்னேரி அடுத்த ரெட்டிபாளையத்தை, சேர்ந்தவர் ஷர்மிலி (18), காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது தேர்வு எழுதி வரும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452