புதிய காவல் ஆணையம் அமைத்திட முதலமைச்சர் ஆணை

Admin

தமிழ்நாடு காவல்துறை எனது குற்றங்களை தடுக்கும் துறையாகவும் தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல் குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகத் செயல்பட வேண்டும் என்பதில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் வழியில் செயல்பட்டு வரும் அரசு உறுதியாக உள்ளது. மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி அமைதியான சூழல் சமூக நல்லிணக்கத்தை பாதுகாத்தல் போன்ற பல்வேறு பணிகளில் காவல்துறை தனது முயற்சியை தொடர்ந்து தொய்வில்லாமல் செய்துகொண்டிருக்கிறது. மாநிலத்தின் அமைதியைப் பேணி பாதுகாத்து சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் முக்கிய பணிகளை ஆற்றிவரும் காவல்துறையின் பணி மேலும் சிறக்க பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.

காவலர்களின் நலன் காவலர் பொதுமக்கள் இடையேயான உறவை மேம்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்களை விரிவாக ஆய்வு செய்யும் பொருட்டு கடந்த 1969, 1989 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையிலான கழக அரசின் முறையே மூன்று காவல் ஆணையம் அமைத்து அவற்றின் பரிந்துரைகளைப் பெற்று காவல் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்தது.

அதன் தொடர்ச்சியாக 2021 சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் மீண்டும் கழக அரசு அமைத்ததும் நான்காவது முறையாக போலீஸ் கமிஷன் அமைக்கப்பட்டு, ஒரு கால வரையறைக்குள் அதன் பரிந்துரைகள் பெறப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக கடந்த 13. 9 .2021 அன்று சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரையாற்றுகையில், காவலர் பொதுமக்களுக்கு இடையேயான உறவை மேம்படுத்தவும், காவல் துறை பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களுக்கு தேவையான திட்டங்களையும், புதிய பயிற்சி முறைகளையும் பரிந்துரைக்கும் நோக்கத்துடன் காவல் ஆணையம் ஒன்று மீண்டும் அமைக்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், புதிய காவல் ஆணையம் ஒன்றை தற்போது அந்த காவல் ஆணையத்திற்கு மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு சி டி செல்வம் அவர்கள் தலைவராகவும், திரு. அலாவுதீன் ஐஏஎஸ் ஓய்வு, முனைவர் திரு.கே ராதாகிருஷ்ணன் ஐபிஎஸ், ஓய்வு மனநல மருத்துவர் திரு.சி.ராமசுப்பிரமணியம், பேராசிரியர் முனைவர் திருமதி. நளினி ராவ் ஆகியோர் உறுப்பினர்களாகவும் காவல்துறை குற்றப்புலனாய்வு கூடுதல் இயக்குனர் திரு மகேஷ் குமார் ஐபிஎஸ் அவர்கள் உறுப்பினர் செயலாளராகவும், நியமனம் செய்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆணையம் காவலர்களின் மற்றும் காவல்துறையின் பல்வேறு அம்சங்களை விரிவாக ஆய்வு செய்து குறிப்பிட்ட கால வரையறைக்குள் அரசுக்கு தனது பரிந்துரைகளை அளிக்கும் காவல் துறையின் செயல்பாடுகளை சிறப்பாக மேம்படுத்துவதற்காகவும், இணையவழி குற்றங்களை தடுக்கவும் சேவை வழங்குவதில் மனிதாபிமானத்துடன் கூடிய நட்புறவோடு பொதுமக்களை அணுகுவதற்கும், உரிய நடவடிக்கைகள் மூலமாக காவல்துறையினரின் சேவையை மேலும் வலுவூட்டும் இந்த ஆணையத்தின் பரிந்துரைகள் வழிகாட்டியாகவும், உறுதுணையாகவும், அமைந்திடும்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

ஈரோட்டில் போலீசாருக்கு கொரோனா, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

589 ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் 2 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 6 போலீசாருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு சூரம்பட்டி போலீஸ் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452