புதுவையில் லாட்டரி சீட்டு விற்பனை இரண்டு பேர் கைது

Admin

புதுச்சேரி : புதுவையில் ஆண்லைன் லாட்டரி விற்ற கும்பல் கைது. புதுவை வடக்கு பகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஆண்லைன் லாட்டரி மற்றம் 3 நம்பர் லாட்டரி விர்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு பல்வேறு புகார்கள் வந்தது. இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வடக்கு பகுதி காவல் கண்காணிப்பாளர் ரச்சனாசிங் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் சண்முகாபுரம் சொக்கநாதன்போட் பகுதியில் உள்ள ஒரு பேன்சிஸ்டோரில் லாட்டரி விற்பதாக தகவல் வந்தது. இதையடுத்து கண்காணிப்பாளர் தலைமையிலான குற்றப்பிரிவு காவல்துறையினரும், கோரிமேடு குற்றப்பிரிவு காவல்துறையினரும் அந்தகடைக்கு விரைந்து சென்றனர்.

அங்கு லாட்டரி சீட்டு விற்ற குருமாம்பேட் பகுதியை சேர்ந்த ரமேஷ் (43) முத்தரையர் பாளையத்தை சேர்ந்த மாரியப்பன் (52) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 16ஆயிரத்து 490 பணமும், 2 செல்போன், லாட்டரி சீட்டுகள், நோட்டுகள் பறிமுதல் செய்தனர். முக்கிய குற்றவாளியான மூலங்குளத்தை சேர்ந்த கார்த்திக்கை தேடிவந்தனர்.

அவனை பல வருடங்களாக தேடி வந்தனர். நேற்று இரவு 12 மணிக்கு அவனது வீட்டின் அருகே காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். குற்றவாளிகளை விரைந்து பிடித்த காவல் கண்காணிப்பாளர் குற்றப்பிரிவு மற்றும் கோரிமோடு குற்றப்பிரிவு காவல்துறையினரையும் காவல் கண்காணிப்பாளர் ரச்சனாசிங் பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

"என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்"

140 பொதுவாக மக்கள் நினைப்பது இந்த வாகன அற்ப வழக்குகளை Traffic Police மட்டும் பார்த்தால் என்ன என்று? உலகளவில் விபத்தில் இறப்போர் எண்ணிக்கையில் இந்தியாதான் முதலிடம், […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452